Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG : புஜாராவை டீமில் எடுக்க முடியாது.. அடம்பிடித்த ரோஹித்.. கழட்டி விட்ட பிசிசிஐ

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் தூணாக நின்று ஆடும் பேட்ஸ்மேனான புஜாராவை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ தேர்வுக் குழு புறக்கணித்து இருக்கிறது. முன்னதாக தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அவர் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் பங்கேற்று இரட்டை சதம் அடித்து தன் ஃபார்மை நிரூபித்துக் காட்டினார்.

ஆனாலும், அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் அளிக்கப்படவில்லை. இந்த புறக்கணிப்பு கடும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது. இத்தனைக்கும் புஜாரா களமிறங்கும் மூன்றாவது பேட்டிங் வரிசையில் அவருக்கு பதிலாக களமிறங்கி வரும் சுப்மன் கில் இதுவரை சரியாக ரன் குவிக்கவில்லை. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் அவர் சொதப்பலாகவே ஆடினார். ஆனாலும், அவருக்கு தொடர்ந்து டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ரஞ்சி ட்ராபியில் முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்த புஜாரா, அடுத்த போட்டியில் 49 ரன்கள் சேர்த்தார். அதன் மூலம் தான் நிலையாக ரன் குவிப்பதை அவர் உறுதி செய்து இருந்தார். ஆனாலும், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புஜாராவை கண்டு கொள்ளவில்லை.

India vs England Test Series : Rohit Sharma did a mistake by not selecting Cheteshwar Pujara

தற்போது புஜாராவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று போட்டிகள் தான். ஏனெனில், தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான அணி மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் சுப்மன் கில் சரியாக ரன் குவிக்கவில்லை என்றால் புஜாராவை அணியில் சேர்க்க அதிக வாய்ப்பு உள்ளது.

தற்போது ரஞ்சி ட்ராபி தொடர் நடந்து வருவதால் அதற்கு நடுவே புஜாரா மேலும் சில போட்டிகளில் சிறப்பாக ரன் குவிக்க வேண்டும். அப்போது தான் இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டு சரியாக ஆடாத சுப்மன் கில்லை நீக்கிவிட்டு புஜாராவுக்கு அணியில் இடம் கிடைக்கும். அதே சமயம், சுப்மன் கில் முதல் இரண்டு போட்டிகளில் ஒரு சதம் அடித்தாலும் கூட புஜாரா இனி டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்பது உறுதியாகி விடும்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி -

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான்.

Story first published: Saturday, January 13, 2024, 6:30 [IST]
Other articles published on Jan 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+