Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த 5 இந்திய வீரர்கள்

லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி வரும் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன் குவித்த ஐந்து இந்திய வீரர்கள் யார் என்பது குறித்துப் பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் இடம் பிடித்திருக்கிறார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2535 ரன்கள் சேர்த்து இருக்கிறார். ஏழு சதங்களை அடித்து இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக சச்சினின் பேட்டிங் சராசரி 51.73 என்பதாக உள்ளது.

India vs England Test Series Top Indian Run-Scorers Against England leading by Sachin Tendulkar

சுனில் கவாஸ்கர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2483 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சுனில் கவாஸ்கர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்கு சதங்களை அடித்து இருக்கிறார். அவரது சராசரி 38.2 என்பதாக உள்ளது.

மூன்றாவது இடத்தில் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி இடம் பிடித்திருக்கிறார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 28 போட்டிகளில் 1991 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது சராசரி 42.36 என்பதாக உள்ளது. விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக 5 சதங்களை அடித்திருக்கிறார்.

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் ராகுல் டிராவிட் இருக்கிறார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 21 போட்டிகளில் விளையாடி 1950 ரன்களைச் சேர்த்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 60.93 என்பதாக உள்ளது. அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஏழு சதங்களை அடித்திருக்கிறார். இந்தப் பட்டியலிலேயே இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள இந்திய வீரர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் குண்டப்பா விஸ்வநாத் இடம் பெற்று இருக்கிறார். அவர் 30 போட்டிகளில் 1880 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது சராசரி 37.6 என்பதாக உள்ளது. ஆறாவது இடத்தில் சித்தேஸ்வர் புஜாரா இடம் பிடித்திருக்கிறார். அவர் 27 போட்டிகளில் 1778 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 39.51 என்பதாக உள்ளது.

அதேபோல, இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 30 போட்டிகளில் 2846 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணி வீரர்களையும் சேர்த்து பார்க்கும் போது ஜோ ரூட் தான் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு எதிராக 2846 ரன்கள் என்பதை 58.08 என்ற பேட்டிங் சராசரியுடன் எடுத்திருக்கிறார். மேலும் அவர் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக பத்து சதங்களை அடித்திருக்கிறார்.

Story first published: Sunday, June 8, 2025, 17:22 [IST]
Other articles published on Jun 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+