IND vs ENG : இந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாம் தற்போது இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மறக்க முடியாத போட்டிகளை பார்த்து வருகிறோம். தற்போது ஜெய்ஸ்வால் எப்படி இரட்டை சதம் அடித்து அசத்துகிறாரோ, அதே போல் வினோத் காம்ளி, ஒரு காலத்தில் இந்தியாவுக்காக கலக்கினார்.
இந்த டெஸ்ட் மேட்சில் இரட்டை சதம் எடுத்தார்.இங்கிலாந்து டீம் சார்பில் சதம் எடுத்தவர் கிரீம் ஹிக்.அணில் கும்ளே எடுத்தது 7 விக்கெட்டுகள். இங்கிலாந்து பவுலர்களில் அதிக பட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தவர் பில் தூப்னல்.( Phil Tufnell இந்த டெஸ்ட் மொத்தம் மூன்று இன்னிங்ஸ்களே கண்டது.

6 LBW க்கள் . மொத்தம் இங்கிலாந்து டீம் வீரர்கள் 8 அவுட் ஆவதற்கு இந்திய டீம் விக்கெட் கீப்பர் கிரண் மோரே உதவியுள்ளார்
( 5 கேட்சுக்கள் 2 ஸ்டம்பிங்கள் 1 ரன் அவுட்).
மொத்தம் 7 சிக்ஸர்கள்
( இந்திய டீம் 5 இங்கிலாந்து டீம் 2 )
பவுண்டரிகள் 136 ( இந்திய டீம் 66 இங்கிலாந்து டீம் 70 )
வினோத் காம்ளி முதல் சதமே இந்த இரட்டை சதம் தான்.இது அவரது மூன்றாவது டெஸ்ட் மேட்ச்.411 பந்துக்களை எதிர் கொண்டு, 23 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்த ரன்கள் 224.இங்கிலாந்து வீரர் ஹிக், 319 பந்துக்கள் எதிர் கொண்டு, 20 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உதவியுடன் எடுத்த ரன்கள் 178.டாஸ் வெற்றி பெற்ற இங்கிலா ந்து டீம் முதலில் பேட்டிங் செய்தது.முதல் நான்கு விக்கெட்டுக்கள் விரைவாக விழ, இங்கிலாந்து டீமின் ஸ்கோர் 58 - 4
அவுட் ஆன நான்கு வீரர்கள்.
கிரஹம் கூச் 4
அலெக்
ஸ்டெவார்ட் 13
ராபின் ஸ்மித் 2
மைக் காட்டிங் 23
ஹிக் பொறுமையாகவும்,
நிதானமாகவும் அதே சமயத்தில் சிறப்பாக்கவும் ஆட ஆரம்பித்தார்.
மைக் அதேற்டன் அவுட் ஆகும் பொழுது ஸ்கோர் 116 - 5
மைக் அதேற்டன் 37
அடுத்து அவுட் ஆனவர் ரிச்சர்ட் ப்ளாக்கே.
118 - 6
ஹிக், லெவிஸ் ஜோடி சிறப்பான ஆட்டங்களை வெளி படுத்தினர்.
ஏழாவது விக்கெட், கிறிஸ் லெவிஸ் அவுட்.
49 ரன்கள் ( 5 x 4 )( 112 பந்துக்கள் )
211 - 7
அடுத்த இரண்டு வீரர்களுடன், ஹிக் இங்கிலாந்து டீமின் ஸ்கோர் உயர செய்தார்.
ஜான் எம்புறே 12 ரன்கள் ( 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் )11 ரன்கள்
262 - 8
பில் டெப்ரியுட்டஸ் 11 ரன்கள்( 17 ரன்கள்
பார்ட்னர்ஷிப்)
279 - 9
கடைசி ஆட்டக் காரர்
பில் தூப்னல் உடன் சேர்ந்து சதம் அடித்து இருந்த, ஹிக் விளையாட ஆரம்பித்தார்.
அந்த வீரர் 40 பந்துக்கள் தாக்கு பிடித்து ஆடினார்.கடைசியாக அவுட் ஆனவர் கிரேீம் ஹிக் ஆவார். இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 68 ரன்கள்
பார்ட்னர்ஷிப்பில் பெற்றனர்.
பில் தூப்னல் 2*
ஹிக் அவுட் 178 ரன்கள்.
இதுவே இவரது முதல் சதம் டெஸ்டுகளில்.
இங்கிலாந்து டீம் ஆல் அவுட் 347 ரன்கள்.
இந்திய டீம் பவுலிங்
கபில் தேவ் 3 - 35
பிரபாகர் 1 - 52
வெங்கடபதி
ராஜு 2 - 102
அணில் கும்ளே 3 - 95
இந்திய டீம் முதல் இன்னிங்ஸ், ஆட துவங்கியது.
நவ் ஜோத் சித்து, மனோஜ் பிரபாகர் சிறப்பாக ஆடினார்கள்.
ஒப்பனிங் ஜோடி 100 ரன்களை கடந்தனர்.
பிரபாகர் அவுட். ஹிக் வீசிய பந்தில் கேட்ச் பிடித்தவர் ரிச்சர்ட் ப்ளாக்கே.
44 ரன்கள். ( 4 x 4 & 1 x 6 )
109 - 1
சித்துவும், வினோத் காம்ளியும் சேர்ந்து ஆட துவங்கினர்.
ரன்கள் வந்த வண்ணம் இருந்தன.
201 பந்துக்கள் ஆடிய சித்து அவுட்.
( 12 x 4 & 1 x 6 )
79 ரன்கள்
174 - 2
தொடர்ந்து களம் இறங்கிய சச்சின் டெண்டுல்கர் உடன் நின்று இருவரும் டீமின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர்.காம்ளி டெஸ்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
213 பந்துக்கள் ஆடி டெண்டுல்கர் அவுட்.
LBW பில் தூப்னல்
( 10 x 4 )
78 ரன்கள்
368 - 3
இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் 194 ரன்கள் கூடின.
கேப்டன் அசாருதின், காம்ளிக்கு கம்பெனி கொடுத்தார்.
மூன்றாம் நாள் முடிவில்இந்திய டீமின் ஸ்கோர் 397 - 3
வினோத் காம்ளி 164*
அசாருதின் 14*
நான்காம் நாள் ஆட்டதில் இந்திய டீம் ஆல் அவுட்.
அசாருதின் அவுட்.
LBW லெவிஸ் 26 ( 58 பந்துக்கள் 4 x 4)
418 - 4
பிரவின் அம்ரே, வினோத் காம்ளி 101 ரன்கள் சேர்த்தனர்.
பிரவின் அம்ரே 57 ரன்கள் ( 74 பந்துக்கள் 9 x 4 )
519 - 5
கபில் தேவ் 22 ரன்கள்
560 - 6
ஒன்பதாவது விக்கெட் விழுந்தது. வினோத் காம்ளி அவுட்.
224 ரன்கள்.
591 - 9
அணில் கும்ளே 16 ரன்கள்
ராஜேஷ் சவுகான் 15 ரன்கள்
இந்திய டீம் ஆல் அவுட் 591.
இங்கிலாந்து டீம்
பவுலிங்
கிறிஸ் லெவிஸ் 2 - 114
எம்புரே 2 - 144
தூப்னல் 4 - 142
ஹிக் 2 - 97
இரண்டாவது இன்னிங்ஸ் துவக்கம் எதிர் பார்த்தபடி அமையவில்லை
முன்னணி மூன்று வீரர்கள் மிகவும் குறைவாக ஸ்கோர் செய்தனர்.
34 - 3
ராபின் ஸ்மித் (62 ) மைக் காட்டிங் (61) நன்றாக விளையாடினார்கள்.
இவர்களது பார்ட்னர்ஷிப் 121 ரன் கள் சேர்த்தனர்.
மைக் காட்டிங் அவுட்
155 - 4
ராபின் ஸ்மித் அவுட்
181 - 5
ஹிக்கை தவிர வேறு ஆட்டக்காரர்கள், அதிகமாக ரன்கள் குவிக்க வில்லை.
ஹிக் எட்டாவதாக அவுட் ஆனார்.
47 ரன்கள் ( 62 பந்துக்கள் 8 x 4 )
214 - 8
இங்கிலா ந்து டீம் ஆல் அவுட் 229 ரன்கள்.
இந்திய டீம் பவுலிங்
கபில் தேவ் 0 - 21
பிரபாகர் 3 - 28
வெங்கடபதி
ராஜு 2 - 68
அணில் கும்ளே 4 - 70
சவுகான் 1 - 32
இந்த டெஸ்ட் நடைப் பெற்றது வான்கடே ஸ்டேடித்தில், பாம்பே
19 - 23, பிப்ரவரி, 1993
ஆட்ட நாயகராக கிரேீம் ஹிக்கும், தொடர் ஆட்டக்காரராக அணில் கும்ளேயும் தேர்வு செய்ய பட்டனர்.இந்திய டீம் ஒரு இன்னிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.
வாசுதேவன், பெங்களூரு