
2வது இன்னிங்ஸ் ஆட்டம்
நேற்றைய 3ம் நாள் ஆட்டத்தின் போது 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தற்போது வரை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. இதனால் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை விட தற்போது 171 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா முன்னிலை
இந்திய அணிக்கு இன்னும் கையில் 7 விக்கெட்டுகள் இருப்பதால், குறைந்தது 300 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் வலுவாக காரணம் ரோகித் சர்மா தான். இங்கிலாந்து பவுலர்களின் பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிகளுக்கு அனுப்பி அசத்தினார். இதனால் இந்திய வீரர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.

அட்டகாசமான சதம்
சிறப்பாக விளையாடி வந்த அவர், சதம் விளாசி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இது அவருக்கு ஒரு ஸ்பெஷலான சதமாகும். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அயல்நாட்டு மண்ணில் இதுவரை சதம் விளாசியது இல்லை. இதனால் ரோகித் சர்மா இந்தியாவில் விளையாட தான் சரிபட்டு வருவார், அவரின் பாச்சா அயல்நாடுகளில் பலிக்காது என விமர்சனங்கள் இருந்து வந்தது. ஆனால் நேற்றைய சதத்தின் மூலம் அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

கோலி கொண்டாட்டம்
256 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா. 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 127 ரன்கள் குவித்து அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தார். அப்போது ஓய்வறையில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி ரோகித்தின் இந்த சதத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடித் தீர்த்தார். சக வீரருக்காக கோலி கொண்டாடிய விதம் ரசிகர்களுக்கு பூரிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனைவிக்காக பரிசு
கேப்டன் கோலி மட்டுமல்லாமல், ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவும் கொண்டாடினார். ஒவ்வொரு தொடரிலும் மனைவிக்காக ரோகித் ஏதேனும் ஒரு சர்ஃபரைஸ் கொடுப்பார். அந்தவகையில் இங்கிலாந்து தொடரில் தனது முதல் அயல்நாட்டு சதத்தை பரிசளித்துள்ளார். தற்போதுவரை இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று மதியம் 4ம் நாள் ஆட்டம் தொடங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











