Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தனி விமானம் மூலம் அவசரமாக வந்த அஸ்வின்.. 28 ஓவர் வரை வாய்ப்பு தராத ரோகித்.. காரணம் என்ன தெரியுமா?

ராஜ்காட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி மாபெரும் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சின் போது தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 500 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை தொட்ட நிலையில் திடீரென்று போட்டியிலிருந்து விலகினார்.

அவருடைய தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அஸ்வின் அவசரமாக போட்டியிலிருந்து விலகி சென்றார் என பிசிசியின் முக்கிய நிர்வாகி ராஜீவ் சுக்லா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

R Ashwin

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் அஸ்வின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக தான் இருந்தது. மேலும் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது. கடைசி இரண்டு நாட்களில் 10 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்றால் அஸ்வினின் பங்கு மிகவும் முக்கியம்.

இதனால் தன்னுடைய தாய் அபாய கட்டத்தை தாண்டி விட்டதை அடுத்து அஸ்வின் உடனடியாக தனி விமான மூலம் ராஜ்காட்டுக்கு வந்து கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்றார். இந்த நிலையில் தான் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் விக்கெட் வேட்டை நடத்தியது. குறிப்பாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் பந்துகள் எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர்.மேலும் ஆடுகளமும் யாருமே கணிக்க முடியாத அளவு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது.

இந்த நிலையில் தனது தாயை விட்டு நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட வந்த அஸ்வினுக்கு ரோகித் சர்மா முன்னதாகவே ஓவர் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 27 ஓவர் முடிந்த நிலையில் தான் முதல் ஓவரை அஸ்வினுக்கு ரோகித் சர்மா வழங்கினார். அதற்குள் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்து தடுமாறியது.

நாட்டுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து வந்த வீரருக்கு ஏன் ரோகித் சர்மா முன்பே ஓவர் வழங்காமல் காலம் தாழ்த்தினார் என்று ரசிகர்கள் அவர் மீது கோபப்பட்டனர். ஆனால் இதில் ரோகித் சர்மா மீதான தவறு ஏதுமில்லை. இது முழுக்க முழுக்க ஐசிசி விதி தான் காரணம். ஒரு வீரர் காயம் காரணமாகவோ இல்லை வேறு ஏதேனும் காரணமாகவோ களத்தில் நிற்காமல் வெளியேறினால், அவர் எவ்வளவு காலம் வெளியேறினாரோ அவ்வளவு காலம் மீண்டும் களத்திற்கு வந்து நின்ற பிறகுதான் அவரால் பந்து வீச முடியும்.

அஸ்வின் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்சின் போது ஒரு ஸ்ஷன் வரை களத்தில் இல்லை. இதனால் அதனை கணக்கிட்டு அவ்வளவு நேரம் அஸ்வின் களத்தில் நின்ற பிறகு தான் ஓவர் வீச அனுமதிக்கப்படுவார் என்பது ஐசிசியின் விதி. இதனால் தான் அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 27 ஓவருக்கு பிறகு பந்து வீச வந்தார். இங்கிலாந்து பயங்கரமாக விளையாடும் இதனால் அஸ்வினி பங்களிப்பு முக்கியம் என்று ரோகித் எதிர்பார்த்த நிலையில் அதற்கு தேவையே இல்லாமல் ஜடேஜாவும் குல்தீப் யாதவும் ஆக்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 19, 2024, 15:55 [IST]
Other articles published on Feb 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+