For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பரீட்சை வைத்த ஹாங்காங்.. இந்திய அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்.. யாருக்கு பதிலாக தெரியுமா?

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த இந்திய அணி, கத்துக்குட்டி அணியான ஹாங்காங் உடன் மோதுகிறது.

Recommended Video

T20 World Cup தொடருக்கான இந்திய அணியில் 13 வீரர்கள் உறுதி? *Cricket

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, சேஸ் செய்தால் தான் வெற்றி கிடைக்கும் என்ற ஆடுகளத்தில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.

இதன் மூலம், இந்திய அணிக்கு நல்ல சவால் காத்துள்ளது. கத்துக்குட்டி அணியுடன் விளையாடும் போது, இது போன்ற சவாலை நாம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

ஆசிய கோப்பை: வெறும் 45 செஷன்தான்.. விராட் கோலி மனநிலையில் பெரும் மாற்றம்.. யார் இந்த பேடி அப்டன்? ஆசிய கோப்பை: வெறும் 45 செஷன்தான்.. விராட் கோலி மனநிலையில் பெரும் மாற்றம்.. யார் இந்த பேடி அப்டன்?

நல்ல சவால்

நல்ல சவால்

அப்போது தான், பலம் வாய்ந்த அணியை எதிர்கொள்ளும் போது ஒரு வேலை முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால், அதனை எப்படி எதிர்கொள்வது என்ற அனுபவம் கிடைக்கும். ஆனால் ரோகித் சர்மா பேசும் போது, நாங்கள் டாஸ் வென்றால் முதலில் பந்துவீச தான் இருந்தோம் என்று தவறான முடிவை எடுக்க இருந்தார், தற்போது ஹாங்காங் அணியோ இல்லை இயற்கையோ இந்திய அணிக்கு ஒரு நல்ல சவாலை தந்துள்ளது.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய ஹர்திக் பாண்டியாவுக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடி வீரர் ரிஷப் பண்ட்க்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆடுகளம்

ஆடுகளம்

ஆடுகளம் குறித்து பேசிய ரோகித், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். நாங்கள் எதிரணி குறித்து பார்க்கவில்லை. அதற்கு பதில் நாங்கள் எங்களுடைய ஆட்டத்தை சரியான முறையில் விளையாடி வெற்றி பெற வேண்டும். ஹாங்காங் அணியை பொறுத்தவரை தகுதி சுற்றில் அனைத்து போட்டியிலும் வென்று நல்ல பார்மில் உள்ளது.இதனால் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இந்திய அணி, 1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ரிஷப் பண்ட், 6, தினேஷ் கார்த்கிக், 7. ஜடேஜா, 8, புவனேஸ்வர் குமார், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, ஆவேஷ் கான், 11, சாஹல்

Story first published: Wednesday, August 31, 2022, 19:51 [IST]
Other articles published on Aug 31, 2022
English summary
India vs Hong Kong – Star Player Returns in to Playing xi ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற ஹர்திக்.. சரிவை சந்தித்த சூர்யகுமார்.. டி20 தரவரிசையில் அதிரடி மாற்றம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X