Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs IRE- தொடக்கமே பும்ராவுக்கு கலக்கல்.. இந்திய அணியில் 2 இளம் வீரர் அறிமுகம்.. இருண்ட அயர்லாந்து

டுபிளின் : இந்தியா அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தற்போது டுபிளின் நகரில் தொடங்குகிறது. இதில் 11 மாதங்களுக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அணிக்கு திரும்பிருக்கிறார்.

இந்தத் தொடரில் முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் பும்ரா தலைமையில் இளம் படை களமிறங்குகிறது. வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா வந்து வீச்சை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளார்.

India vs Ireland 1st t20 - Rinku singh and prasidh krishna made debut today

இது குறித்து பேசிய அவர் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு வந்து அனைவரும் நன்றாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் நினைப்பார்கள். ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஆடுகளம் பந்துவீச்சாளருக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என நாங்கள் ஆசைப்படுவோம். இந்த போட்டியில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய அணியில் இரண்டு அறிமுக வீரர்கள் விளையாடுகிறார்கள். ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவரிடம் நீ இந்த ஆட்டத்தை மகிழ்வாக விளையாடு முடிந்தவரை சந்தோஷமாக இரு என்று தான் நான் கூறியிருந்தேன்.

இதனை தொடர்ந்து பேசிய அயர்லாந்து அணி கேப்டன் ஸ்டெர்லிங், முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய ஸ்கோரை நிர்ணிக்க வேண்டும் என நினைக்கிறேன். பேட்ஸ்மேன் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். நாங்கள் எந்த அணியை எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து யோசிக்காமல் எங்களுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதைப் பற்றிதான் யோசித்தோம்.

India vs Ireland 1st t20 - Rinku singh and prasidh krishna made debut today

டி20 உலக கோப்பை தொடருக்கு நாங்கள் தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தப் பயணத்தின் நல்ல தொடக்கமாகவே இது கருதுகிறேன். கிரைக் யங் எங்கள் அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்று கேப்டன் ஸ்டர்லிங் கூறினார். போட்டியின் போது மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய அணி தற்போது இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி அமல்படுத்தப்பட்டால் அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணி வெற்றியுடன் இந்த தொடரை தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனென்றால் அயர்லாந்துடன் இந்திய அணி ஒரு முறை கூட தோற்றது இல்லை.

Story first published: Friday, August 18, 2023, 19:27 [IST]
Other articles published on Aug 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+