Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs அயர்லாந்து இன்று முதல் டி20 போட்டி.. பிட்ச் ரிப்போர்ட் என்ன? வானிலை அறிக்கை? எந்த சேனல்?

டுபிளின் : இந்தியா அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மாலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்த நிலையில் தற்போது பும்ராவின் தலைமையில் இந்திய அணியின் இளம்படை இந்த தொடரில் களமிறங்குகிறது.

இதுவரை அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது கில், ஹர்திக் பாண்டியா சூரிய குமார் யாதவ் போன்ற வீரர்கள் கூட இல்லாததால் அயர்லாந்தை இந்தியா சமாளிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ind vs ire

டுப்ளனில் உள்ள ஆடுகளம் வெஸ்ட் இண்டீஸ் போல் இல்லாமல் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். பந்து பேட்டிற்கு அல்வா போல் வரும் என்பதால் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக இது இருக்கும். இதனால் பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை துரத்துவது எளிதாக இருக்கும். கடந்த முறை இங்கு இந்திய அணி விளையாடிய போது 225 ரன்கள் எட்டியது.

இதனை அடுத்து மீண்டும் களமிறங்கிய அயர்லாந்து அணி 221-ரன்கள் வரை குவித்து நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் அயர்லாந்து இந்திய வீரர்கள் குறைத்து மதிப்பிட முடியாது. இதேபோன்று நாளைய ஆட்டத்தின் போது மழை குறுக்கிட அதிக வாய்ப்பு இருக்கிறது.மாலை 4 மணி அளவில் எல்லாம் மஞ்சள் அலர்ட் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் நாளைய போட்டி நடைபெறுவதில் சிக்கலும் உள்ளது.

இதனை தவிர்த்து முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் போட்டியின் நடுவே கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்திய அணி தங்களது பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோரை களம் இறக்கும். பும்ரா வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்கள், இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஜியோ சினிமாவில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

Story first published: Friday, August 18, 2023, 1:10 [IST]
Other articles published on Aug 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+