For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது என்ன டா புதிய குழப்பம்.. இந்தியாவின் ஸ்கோர் கணக்கீட்டில் தவறு.. இப்படிலாமா நடக்கும் ?

டுபிளின்: இந்தியா, அயர்லாந்து அணிக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இலக்கை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

ஏற்கனவே தொடரில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

India vs Ireland 2nd t20 – India score wrongly calculated

2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 176 ரன்கள் சேர்த்தது. தீபக் 'ஹூடா 55 பந்துகளில் சதம் விளாசினார். சஞ்சு சாம்சன் 77 ரன்கள் குவிக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 227 ரன்கள் அடித்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு இந்தியா அடித்தது 225 ரன்கள் தான் என்று ஸ்கோர் மாற்றி அமைக்கப்பட்டதால், ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இதன் பின்னர் நடுவர்கள் தலையிட்டு, 19.1வது ஓவரில் தீபக் ஹூடா 2 ரன்கள் ஓடியதாக தவறுதலாக கணக்கு செய்யப்பட்டது. ஆனால் அவர் எந்த ரன்னும் ஓடவில்லை என்று விளக்கம் அளித்த நடுவர்கள், ஸ்கோரை 225 ரன்களாக மாற்றி அமைத்து, இலக்கை 226 ரன்களாக குறைத்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பால் ஸ்டர்லிங், பால்பிரின் ஆகியோர் தொடக்க வீரராக இறங்கி சிக்சர்களை பறக்கவிட்டனர். இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி தரப்பட்டது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 5.4 ஓவரில் 72 ரன்கள் சேர்த்தது.

55 பந்துகளில் தீபக் ஹூடா சதம்.. இந்தியா வரலாற்று சாதனை.. அயர்லாந்துக்கு கடும் நெருக்கடி 55 பந்துகளில் தீபக் ஹூடா சதம்.. இந்தியா வரலாற்று சாதனை.. அயர்லாந்துக்கு கடும் நெருக்கடி

Story first published: Tuesday, June 28, 2022, 23:47 [IST]
Other articles published on Jun 28, 2022
English summary
India vs Ireland 2nd t20 – India score wrongly calculated இது என்ன டா புதிய குழப்பம்.. இந்தியாவின் ஸ்கோர் கணக்கீட்டில் தவறு.. இப்படிலாமா நடக்கும் ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X