வதோதரா: 2026-ம் ஆண்டின் முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டம் நாளை (ஞாயிறு) வதோதராவில் நடைபெறவுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் அணிக்குத் திரும்பியுள்ளதால், இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி: இந்தியா vs நியூசிலாந்து (முதல் ஒருநாள் போட்டி)
தேதி: ஜனவரி 11, 2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மதியம் 1:30 மணி (இந்திய நேரப்படி)
இடம்: வதோதரா
தொலைக்காட்சி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Star Sports Network) சேனல்களில் போட்டியை நேரலையாகக் காணலாம்.
ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங்: ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) செயலி மற்றும் இணையதளத்தில் போட்டியை நேரலையாகக் கண்டு ரசிக்கலாம்.

டி20 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி ஒருநாள் தொடர் இதுவாகும். ஜூலை மாதம் வரை வேறு ஒருநாள் போட்டிகள் இல்லாததால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய ஜெர்சியில் விளையாடுவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்காக இருவரும் நேற்று வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு சுமார் ஒன்றரை மணி நேரம் இருவரும் பயிற்சி மேற்கொண்டனர்.
தனது கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருந்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியில் நீக்கப்பட வாய்ப்புள்ளது. கேப்டன் சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாகக் களமிறங்குவதாலும், மிடில் ஆர்டரில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க நிர்வாகம் விரும்புவதாலும், ஜெய்ஸ்வால் வெளியே அமரவைக்கப்படலாம். இது அவருக்குத் துரதிர்ஷ்டவசமானதே.
மொத்த போட்டிகள்: 120
இந்தியா வெற்றி: 62
நியூசிலாந்து வெற்றி: 50
இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, நிதீஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
நியூசிலாந்து: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ், வில் யங், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், ஜாக் ஃபல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், மைக்கேல் ரே.