For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ 1st ODI: பிளேயிங் 11இல் 3 வேகப் பந்துவீச்சாளர்கள் + 2 ஸ்பின்னர்கள்.. ஒரே ஒரு ஆல்-ரவுண்டர்

வதோதரா: 2026-ம் ஆண்டின் முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஜனவரி 11 அன்று வதோதராவில் நடைபெறவுள்ள முதல் போட்டியில், இந்திய அணி வெற்றியுடன் கணக்கைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணியில் பங்கேற்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

துவக்கம் யார்?

இந்திய அணியின் இன்னிங்ஸை கேப்டன் சுப்மன் கில் மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் தொடங்கவுள்ளனர். ரோஹித் சர்மாவின் அனுபவமும், சுப்மன் கில்லின் துடிப்பும் இணைந்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

India vs New Zealand 1st ODI Predicted Playing XI for Vadodara match Rohit Sharma and Virat Kohli Return

நடுவரிசை: கோலி, ஐயர், ராகுல்

3-வது இடம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, தனது வழக்கமான 3-வது இடத்தில் களமிறங்குவார். அவரது ஃபார்ம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.

4-வது இடம்: காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியைப் பெற்றுள்ள துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், தனக்குரிய 4-வது இடத்தில் களமிறங்குவார்.

5-வது இடம்: விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல். ராகுல் செயல்படுவார். கடைசி 15 ஓவர்களில் ரன் குவிப்பது இவரது பொறுப்பாகும்.

ஆல்ரவுண்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள்

ஹர்திக் பாண்டியாவுக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டி அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் கவனித்துக் கொள்வார்கள். மைதானம் சுழற்பந்துக்குச் சாதகமாக இருந்தால் இவர்களது தாக்கம் அதிகமாக இருக்கும்.

வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ் முன்னின்று வழிநடத்த, அவருடன் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் கூட்டணி அமைப்பார்கள்.

இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் பட்டியல்:

சுப்மன் கில் (கேப்டன்)
ரோஹித் சர்மா
விராட் கோலி
ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்)
கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா
நிதீஷ் குமார் ரெட்டி
குல்தீப் யாதவ்
முகமது சிராஜ்
அர்ஷ்தீப் சிங்
ஹர்ஷித் ரானா

Story first published: Saturday, January 10, 2026, 11:51 [IST]
Other articles published on Jan 10, 2026
English summary
India vs New Zealand 1st ODI: Predicted Playing XI for Vadodara match; Rohit Sharma and Virat Kohli Return
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+