Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ ஒருநாள் தொடர் முழு அட்டவணை, இந்திய ஒருநாள், டி20 அணி விவரம்.. ஜனவரி 11 ஆரம்பம்

மும்பை: 2026-ம் ஆண்டின் தொடக்கமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 11-ம் தேதி வதோதராவில் தொடங்கும் இந்தத் தொடர், ஜனவரி 31 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் தொடர் அட்டவணை:

ஜனவரி 11 (ஞாயிறு) - முதல் ஒருநாள் போட்டி - இடம்: வதோதரா (பிசிஏ மைதானம்) - நேரம்: மதியம் 1:30 மணி.
ஜனவரி 14 (புதன்) - 2-வது ஒருநாள் போட்டி - இடம்: ராஜ்கோட் (நிரஞ்சன் ஷா மைதானம்) - நேரம்: மதியம் 1:30 மணி.
ஜனவரி 18 (ஞாயிறு) - 3-வது ஒருநாள் போட்டி - இடம்: இந்தூர் (ஹோல்கர் மைதானம்) - நேரம்: மதியம் 1:30 மணி.

இந்தியா - நியூசிலாந்து டி20 தொடர் அட்டவணை:

ஜனவரி 21 (புதன்) - முதல் டி20 போட்டி - இடம்: நாக்பூர் (விசிஏ மைதானம்) - நேரம்: இரவு 7:00 மணி.

ஜனவரி 23 (வெள்ளி) - 2-வது டி20 போட்டி - இடம்: ராய்ப்பூர் (வீர் நாராயண் சிங் மைதானம்) - நேரம்: இரவு 7:00 மணி.

ஜனவரி 25 (ஞாயிறு) - 3-வது டி20 போட்டி - இடம்: கவுகாத்தி (பர்சபரா மைதானம்) - நேரம்: இரவு 7:00 மணி.

ஜனவரி 28 (புதன்) - 4-வது டி20 போட்டி - இடம்: விசாகப்பட்டினம் (ஏசிஏ மைதானம்) - நேரம்: இரவு 7:00 மணி.

ஜனவரி 31 (சனி) - 5-வது டி20 போட்டி - இடம்: திருவனந்தபுரம் (கிரீன்ஃபீல்ட் மைதானம்) - நேரம்: இரவு 7:00 மணி.

India vs New Zealand ODI series 2026 Full Schedule Squads and Match Timings Revealed

அணி விவரங்கள்

இந்திய ஒருநாள் அணி (ODI Squad):

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி.

இந்திய டி20 அணி (T20I Squad):

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல் (துணை கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.

நியூசிலாந்து ஒருநாள் அணி (New Zealand ODI Squad):

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவோன் கான்வே, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.

Story first published: Sunday, January 4, 2026, 6:25 [IST]
Other articles published on Jan 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+