Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ - அதிரடி காட்டும் ரோகித்.. 2022 ல் செய்த தவறை சரி செய்கிறார்- தினேஷ் கார்த்திக் பாராட்டு

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடி வருகிறது. குறிப்பாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அரையிறுதி ஆட்டம் என்பதால் ரோகித் சர்மா ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடி பிறகு அதிரடியை காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல் ரோகித் சர்மா அதிரடி காட்டினார்.

India vs New Zealand semi final - Dinesh Karthik speals about Rohit sharma correcting his past mistake

இது குறித்து பேசிய தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை பார்க்கும்போது எனக்கு ஒன்று மட்டும் தான் தோன்றுகிறது. நான் கடந்து முறை டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியுடன் இருந்தேன்.

அப்போது இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ரோகித் சர்மா ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடினார். அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அப்போது ரோகித் சர்மா நான் இன்னும் கொஞ்சம் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும் என்று தன்னுடைய ஆட்டம் குறித்து மிகவும் வருத்தப்பட்டார்.

தற்போது ஒரு ஆண்டு கழித்து மீண்டும் அதே போல் அரையறுதியில் தாம் செய்து தவறை ரோகித் சர்மா திருத்திக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தாலும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என்று ரோகித் சர்மா முடிவு எடுத்து இருக்கிறார். அதுவும் ரோஹித் சர்மாவின் புல் ஷாட் அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.

ரோகித் சர்மா அவருடைய மனைவியை தான் மிகவும் நேசிப்பார். அதற்கு அடுத்ததாக இந்த புல் ஷாட் தான் வரும் என்று எனக்கு நன்றாக தெரியும். ரோஹித் சர்மா எப்போதுமே காரில் வேகமாக போகக்கூடிய நபர். அதேபோல் கிரிக்கெட்டில் இன்று அதிவேகமாக ரோகித் சர்மா விளையாடுகிறார். ரோகித் சர்மாவின் இந்த சுயநலமின்றி அதிரடி ஆட்டத்தால் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்து இருக்கிறது என்று தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

Story first published: Wednesday, November 15, 2023, 15:15 [IST]
Other articles published on Nov 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+