Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவை வட பாவ்னு கிண்டல் செய்த ரசிகர்கள்..நேரலையில் பதிலடி தந்த ஹர்சா போக்லே..சரியான செய்கை

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா இந்தியா அணியின் தொடக்க ஆட்டத்திற்கு தன்னுடைய அதிரடி ஆட்டம் மூலம் வலு சேர்த்தார். அரை இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் பொறுமையாக விளையாடுவார்கள்.

இல்லை என்றால் தடுமாறுவார்கள் என்று கணிக்கப்பட்டது. ஆனால் யாரோ 10 பேர் அடிச்சு நான் ரவுடி ஆகல டா நான் அடிச்ச 10 பேருமே ரவுடிதான் என்று ராக்கி பாய் பேசுவது போல் ரோகித் சர்மா இன்று அரை இறுதியில் பட்டையை கிளப்பினார்.அரை இறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா சிக்சர், பவுண்டரி என பறக்க விட்டார். டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல் 50 ஓவர் போட்டிகளில் விளையாடியதால் நியூசிலாந்து ஆரம்பமே தடுமாறியது.

India vs New zealand semi final - Harsha bhogle trolls fans by saying Vadapav for rohit sharma

ரோகித் சர்மா 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார். ரோஹித் சர்மா சுயநலம் இன்றி அதிரடியாக ஆடியதால் தான் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. இந்த நிலையில் ரோகித் சர்மாவை எப்போதும் ரசிகர்கள் வட பாவ் என உருவ கேலி செய்வார்கள். ரோகித் சர்மா உடல் பருமனாக இருப்பதால் அவரை வட பாவ் என கிண்டல் செய்வார்கள்.

இந்த நிலையில் ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி தம்மை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். இது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் பேசிக்கொண்டிருந்த ஹர்ஷா போக்லே, தமது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரோகித் சர்மா பட்டையை கிளப்பினார். மேலும் இந்தாங்க எனது வட பாவ் என்று ரோகித் சர்மா சொல்லிவிட்டார் என்று கூறினார். இதனை ரோகித் சர்மா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தம்மை வடபாவ் என கிண்டல் செய்த ரசிகர்களை ரோகித் சர்மா தனது பேட்டிங் மூலம் மூக்கை உடைத்து விட்டார் என்பதை தான் ஹர்ஷா போகலே இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாக ரோகித் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் விராட் கோலி ரசிகர்கள் ரோகித் சர்மாவை கிண்டல் செய்யும் விதமாக ஹர்ஷா போக்லே வட பாவ் என்று கூறிவிட்டார் என்று அதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, November 15, 2023, 17:29 [IST]
Other articles published on Nov 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+