தொடங்கியது மேட்ச்.. வீரர்களுக்கு கோலி கொடுத்த "திடீர்" சிக்னல்.. எதிர்பார்க்காத நியூசிலாந்து
சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. அதனுடன் இந்திய அணியும் பக்கா வியூகம் அமைத்திருக்கிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ரசிகர்களின் வில்லன் போல்ட்டோ, ஜேமிசனோ அல்ல.. மழை மட்டும் தான்.
மழை காரணமாக ஜூன்.18ம் தேதி தொடங்க வேண்டிய போட்டி, ஜூன் 19ம் தேதி தான் துவங்கியது. அதுபோல், நேற்றைய (ஜூன்.21) நான்காம் நாள் ஆட்டமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்திற்கு மழை ஆட்டம் காட்டி வருகிறது.

தாக்கம் இல்லாத பவுலிங்
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

ஓய்ந்த மழை
இந்நிலையில், இன்று காலை முதல் சவுத்தாம்ப்டனில் டீசண்ட்டான வானிலை நிலவி வந்த நிலையில், போட்டி தொடங்கும் நேரத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. அதுவும் சாரல் மழை. இதனால், மீண்டும் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த சூழலில் கடந்த அரைமணி நேரமாக மழை இல்லாததால் ஆட்டம் மீண்டும் துவங்கியுள்ளது.

கோலி டிப்ஸ்
போட்டி தொடங்குவதை அம்பயர்கள் மற்றும் மேட்ச் ரெஃப்ரீஸ் அறிவித்த உடனேயே, இரு அணி கேப்டன்களிடமும் இதுகுறித்த அப்டேட் கொடுக்கப்பட்டது. உடனடியாக அவசர டீம் மீட்டிங்கிற்கு இந்திய அணியினரை அழைத்த விராட் கோலி, சில முக்கிய டிப்ஸ்களை வழங்கினார். அவற்றில் முக்கியமானது பும்ராவின் யார்க்கர்ஸ் மற்றும் ஷமியின் ஸ்விங்.

இன் ஸ்விங்ஸ்
ஆம்! மூன்றாம் நாள் ஆட்டத்தில், பும்ராவின் பந்துவீச்சில் எந்த தாக்கமும் இல்லை. அதேபோல், ஷமி பந்துவீச்சில் ஸ்விங் இல்லை. இஷாந்த் மட்டுமே அதிக ஸ்விங் பந்துகளை வீசினார். இதனால், பும்ராவிற்கு யார்க்கர்ஸ் அதிகம் போடும்படி இந்திய அணி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஷமிக்கும் அதிக இன்ஸ்விங் பந்து வீச அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications