Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs NZ 5th ODI : சூப்பர் பௌலிங் போட்டு தோனி, ரோஹித்தை ஏமாற்றிய நியூசி. பௌலர்கள்!

Recommended Video

பந்து வீச்சில் ஆதிக்கம்... கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி

வெல்லிங்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் முதலில் தடுமாறியது.

தோனி, ரோஹித் சர்மா என இரண்டு மூத்த வீரர்களும் பௌல்டு அவுட் முறையில் தங்கள் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தனர். நியூசிலாந்து பந்து வீச்சு நான்காவது போட்டி போலவே இந்த போட்டியிலும் பட்டையைக் கிளப்பியது.

டாப் ஆர்டர் சரிவு

டாப் ஆர்டர் சரிவு

இந்திய அணி ஐந்தாவது போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்கத்தில் இந்திய டாப்-ஆர்டர் மொத்தமாக சரிந்தது. ரோஹித் 2, தவான் 6, ஷுப்மன் கில் 7, தோனி 1 என நான்கு பேட்ஸ்மேன்கள் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ரோஹித், தோனி அவுட்

ரோஹித், தோனி அவுட்

இதில் ரோஹித், தோனி இருவரும் ஸ்விங் பந்துகளில் பௌல்டு அவுட் முறையில் தங்கள் விக்கெட்டை இழந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ஸ்விங் பந்துகளை வீசினர். அனுபவ வீரர்கள் ரோஹித், தோனி கூட அவர்களது ஸ்விங் பந்துவீச்சில் ஏமாந்து விக்கெட்டை பறி கொடுத்தனர்.

ரோஹித் அவுட்

துவக்க வீரர் ரோஹித் மேட் ஹென்றி பந்துவீச்சில் பௌல்டு அவுட் ஆனார். ஹென்றி வீசிய பந்தை மிக நெருக்கமாக தவற விட்டார் ரோஹித் சர்மா. அந்த பந்து ஸ்விங் ஆகி ஆஃப் - ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.

தோனி அவுட்

ரோஹித் போலவே தோனியும் ட்ரென்ட் பவுல்ட் வீசிய லேட் ஸ்விங் பந்தை கணிக்க தவறினார். பேட்டுக்கும், காலுக்கும் இடையே சென்ற பந்து ஸ்டம்ப்களை பதம் பார்த்தது.

இந்தியா வெற்றி பெற்றது

இந்தியா வெற்றி பெற்றது

18 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்தாலும், அடுத்து அம்பதி ராயுடு, விஜய் ஷங்கர், ஜாதவ், பண்டியா ஆகியோர் 252 ரன் வரை ஸ்கோர் ஏற காரணமாக இருந்தனர். நியூசிலாந்து அணி இந்தியா நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் 217 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, February 3, 2019, 15:54 [IST]
Other articles published on Feb 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+