Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- நியூசிலாந்துக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு வழங்கிய கேப்டன் ரோகித்

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாட்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.

இதை அடுத்து இந்த தொடரில் முதல்முறையாக இந்திய அணி முதலாவது பேட்டிங் செய்ய இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து அணி கேப்டன் சாட்னர், "நாங்கள் முதலில் பந்து வீச முடிவு எடுத்து இருக்கிறோம்."

Champions Trophy 2025 Ind vs NZ virat kohli Rohit sharma

"ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. இந்தியாவுக்கு முதலில் நெருக்கடி கொடுக்க நினைக்கின்றோம். இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் கொஞ்சம் சாதகமாக மாறும் என நினைக்கின்றேன். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற முனைப்பு காட்டுவோம். இன்று நாங்கள் லாகூர் புறப்பட்டு சென்று விடுவோம்."

"அங்கேயும் எங்களுக்கு மிகப்பெரிய பணி காத்திருக்கிறது. வித்யாசமான கள சூழலில் விளையாடி எங்களுக்கு நாங்களே சவால்களை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். இன்றைய ஆட்டத்தில் தான் கான்வேக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பதில் டாரல் மிட்செல் விளையாடுகிறார்" என்று கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, "நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே நினைத்தோம். இதனால் டாஸ் இழந்தது கவலை இல்லை. இந்த தொடரில் இரண்டாவது ஆக தான் நாங்கள் பேட்டிங் செய்தோம். இதனால் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து பின் எங்களுடைய பவுலர்கள் இரவு நேரத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்ற சவாலை கொடுக்க நான் விரும்பினேன்."

"கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் எப்படி விளையாடினோமோ அதே போல் தான் இன்றும் விளையாடுவோம். ஒரே விஷயங்களை தான் திரும்பவும் செய்வோம். இன்றைய ஆட்டத்தில் ஹர்ஷித் ராணாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி விளையாடுகிறார். பந்துவீச்சில் பார்க்க நாங்கள் விளையாடி இருக்கிறோம். கடந்த இரண்டு போட்டிகளில் மொத்தமாக நாங்கள் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறோம். எங்களுடைய சுழல் பந்துவீச்சாளர்களும் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் நன்றாக கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்" என ரோகித் சர்மா கூறியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து 13 டாஸ்களை இழந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 2, 2025, 14:21 [IST]
Other articles published on Mar 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+