Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரடி அரைசதம் அடித்து கோலியை ஓரங்கட்டிய ரோஹித் சர்மா.. டி20யில் கோலியை முந்தி முதல் இடம்!

ஆக்லாந்து : ரோஹித் சர்மா இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் கோலியை முந்தி டி20 போட்டிகளில் புதிய சாதனை செய்துள்ளார்.

இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை முறியடித்தார் ரோஹித். அதில் ஒன்றாக இந்திய கேப்டன் கோலியை முந்தியுள்ளார்.

அதிக 50+ ரன்கள்

அதிக 50+ ரன்கள்

டி20 போட்டிகளில் அதிக 50+ ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை கோலி வசம் இருந்தது. நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்த ரோஹித் அந்த சாதனையை முந்தியுள்ளார்.

20 முறை 50+ ரன்கள்

20 முறை 50+ ரன்கள்

கோலி டி20 போட்டிகளில் 19 அரைசதம் அடித்துள்ளார். ரோஹித் இரண்டாவது டி20 போட்டிக்கு முன் 4 சதம், 15 அரைசதம் அடித்து 19 50+ ரன்கள் எடுத்து இருந்தார். நேற்று அடித்த அதிரடி அரைசதம் மூலம் 20 முறை 50+ ரன்கள் எடுத்து அந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அதிக சதம் அடித்தவர்

அதிக சதம் அடித்தவர்

இந்த சாதனை ஒரு புறமிருக்க, கோலி டி20 போட்டிகளில் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை. ஆனால், ரோஹித் சர்மா இதுவரை 4 சதம் அடித்து அதிக டி20 சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

கோலி அதிக சராசரி

கோலி அதிக சராசரி

அதே சமயம், கோலி டி20 போட்டிகளில் அதிக சராசரி வைத்துள்ள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது டி20 போட்டி சராசரி 49.25 ஆகும். ரோஹித் சர்மாவின் சராசரி 32.68 மட்டுமே.

முதல் இடம் பிடித்த ரோஹித்

முதல் இடம் பிடித்த ரோஹித்

இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா மேலும் ஒரு உலக சாதனையை செய்தார். டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். டி20 போட்டிகளில் ரோஹித் 2288 ரன்கள் எடுத்துள்ளார்.

ரோஹித் 102 சிக்ஸர்கள்

ரோஹித் 102 சிக்ஸர்கள்

மேலும், ரோஹித் டி20 போட்டிகளில் 100வது சிக்ஸர் என்ற மைல்கல்லை எட்டினார். டி20யில் ரோஹித் 102 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்னும் இரண்டு சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில் டி20யில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெயரையும் பெறுவார் ரோஹித்.

Story first published: Saturday, February 9, 2019, 10:37 [IST]
Other articles published on Feb 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+