Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 கேப்டன்களில் உலகளவில் முதல் இடம்.. தோனி, கோலியை வேகமாக முந்திய ரோஹித் சர்மா!

Recommended Video

Rohit Sharma T20 record | டி20யில் வரலாற்று சாதனை படைத்த ரோஹித்!- வீடியோ

ஆக்லாந்து : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன டி20 தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ரோஹித் சர்மா கேப்டன்சியில் சிறந்தவர் என நிரூபிக்கும் வகையிலான சாதனைகளை செய்துள்ளார்.

டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக இதுவரை 12 வெற்றிகள் பெற்றுக் கொடுத்துள்ளார் ரோஹித். குறைந்த பட்சம் 5 போட்டிகளுக்கு மேல் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் அதிக வெற்றி சதவீதம் வைத்துள்ளார் ரோஹித்.

நியூசிலாந்து மண்ணில் முதல் வெற்றி

நியூசிலாந்து மண்ணில் முதல் வெற்றி

இரண்டாவது டி20யில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் முதல் டி20 வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த அணிக்கு தலைமை ஏற்ற பெருமையை ரோஹித் தட்டிச் சென்றுள்ளார். இதற்கு முன் தோனி தலைமையில் ஆடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்று இருக்கவில்லை.

ரோஹித் கேப்டன்சி

ரோஹித் கேப்டன்சி

இதுவரை இந்திய டி20 அணிக்கு 14 போட்டிகளில் தலைமை ஏற்றுள்ள ரோஹித் சர்மா அதில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்து அசத்தியுள்ளார். கோலி 20 போட்டிகளில் 12 வெற்றிகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி சராசரி

வெற்றி சராசரி

இவரது வெற்றி சதவீதம் 85.71 ஆகும். தோனி 72 போட்டிகளில் 41 வெற்றி பெற்று, 59.28 வெற்றி சதவீதம் வைத்துள்ளார். கோலி 20 போட்டிகளில் 12 வெற்றிகள் பெற்றுக் கொடுத்து, 63.15 வெற்றி சராசரி வைத்துள்ளார்.

14 போட்டிகளுக்கு பின்..

உலக அளவில் 14 டி20 போட்டிகளுக்குப் பின் அதிக வெற்றிகள் பெற்றுக் கொடுத்த கேப்டன்கள் வரிசையில் முதல் இடத்தை சர்ப்ராஸ் அஹ்மது மற்றும் மைக்கேல் கிளார்க் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ரோஹித் சர்மா. இவர்கள் மூவரும் 14 போட்டிகளில் 12 வெற்றிகள் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

தோனி, கோலி எத்தனை?

தோனி, கோலி எத்தனை?

தோனி மற்றும் கோலி இருவரும் 14 போட்டிகளுக்கு பின்னர் 8 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளனர். வெற்றிகள் குவிப்பதில் தோனி, கோலியை முந்தி ரோஹித் சர்மா படு வேகமாக வளர்ந்து வருகிறார்.

ரோஹித் சிறந்த கேப்டனா?

ரோஹித் சிறந்த கேப்டனா?

ரோஹித் சர்மா, கோலி ஓய்வு பெறும் போது மட்டுமே கேப்டன் பதவியை தற்காலிமாக பெறுகிறார். அந்த சமயங்களில் எல்லாம் தலைமைப் பண்பில் அசர வைக்கிறார் ரோஹித். கேப்டன்சியில் தோனியின் வழியை பின்பற்றும் ரோஹித், சிறந்த கேப்டன் என்ற பெயரை பெற்று வருகிறார்.

தொடரை வென்றால்

தொடரை வென்றால்

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ரோஹித் இன்னொரு முக்கிய சாதனை செய்வார். இந்தியா இதுவரை நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரைக் கைப்பற்றியதில்லை. அந்த சாதனையையும் ரோஹித் செய்வாரா?

Story first published: Saturday, February 9, 2019, 15:45 [IST]
Other articles published on Feb 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+