Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"முதலில் கேப்டன்சி.. தற்போது சாதனை" கோலியின் பெருமைகளை சுக்குநூறாக்கிய ரோகித்.. அதுவும் ஒரே மேட்சில்

கொல்கத்தா: கேப்டன்சி பதவிக்கு அடுத்தபடியாக விராட் கோலியின் மற்றொரு பெருமையையும் தட்டி பறித்துள்ளார் ரோகித் சர்மா.

Recommended Video

Most T20 Titles As A Captain! Dhoni or Rohit? Who is On Top | OneIndia Tamil

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது.

இந்த தொடரை ஏற்கனவே 2 வெற்றிகளுடன் கைப்பற்றிய நிலையில் இந்திய அணி நேற்றைய போட்டியிலும் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தது.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களை விளாசினார். இதன் பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.

பழிவாங்கிய இந்தியா

பழிவாங்கிய இந்தியா

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேறியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது நியூசிலாந்து அணி தான். எனவே டி20 உலகக்கோப்பை முடிந்தவுடனேயே இந்தியா பழிவாங்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல், விராட் கோலி கேப்டன்சியில் செய்யாததை ரோகித் சர்மா செய்துகாட்டிவிட்டதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

பின்னுக்கு சென்ற கோலி

பின்னுக்கு சென்ற கோலி

இந்நிலையில் இந்த போட்டியில் கோலியின் மற்றொரு பெருமையையும் ரோகித் தகர்த்துள்ளார். அதாவது 3வது டி20 போட்டியில் ரோகித் சர்மா 31 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இது அவரின் 30வது அரை சதமாகும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்தவர் என்ற விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

அதிக அரைசதம்

அதிக அரைசதம்

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 30 அரை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 29 அரை சதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 25 அரை சதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதே போல சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்சர்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற மைல்கல்லையும் ரோகித் சர்மா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 22, 2021, 11:49 [IST]
Other articles published on Nov 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+