For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, கோலியால் செய்ய முடியாத சாதனையை செய்யப் போகும் கேப்டன் ரோஹித் சர்மா.. என்ன சாதனை?

Recommended Video

வரலாற்று சாதனையை செய்யப் போகும் ரோஹித் சர்மா- வீடியோ

வெல்லிங்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன டி20 தொடர் நாளை (பிப்ரவரி 6) முதல் தொடங்க உள்ளது.

இந்த தொடருக்கான கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்றுள்ளார். இந்த டி20 தொடரை ரோஹித் கைப்பற்றும் பட்சத்தில் பல்வேறு சாதனைகளை வசப்படுத்த ரோஹித்துக்கு வாய்ப்பு ஏற்படும். கோலி மற்றும் தோனியை பின்தள்ளி சில சாதனைகளை செய்வார் ரோஹித். அவற்றை பற்றி பார்க்கலாம்.

ரோஹித் கேப்டன்

ரோஹித் கேப்டன்

கேப்டன் கோலி ஓய்வில் இருப்பதால், தற்காலிகமாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா கேப்டனாக அதிக வெற்றிகளை குவித்து வருகிறார் என்ற நிலையில், அடுத்து நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட நியூசிலாந்து டி20 தொடரில் கோலியை விட அதிக டி20 போட்டிகள் வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரோஹித் வெற்றிகள்

ரோஹித் வெற்றிகள்

ரோஹித் இதுவரை 12 டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி உள்ளார். அதில் 11 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2018 நிதாஸ் ட்ராபி தொடரில் ஒரே ஒரு போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக ரோஹித் தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது.

2 போட்டிகள் வென்றால்

2 போட்டிகள் வென்றால்

நியூசிலாந்து தொடரில் இரண்டு போட்டிகளில் ரோஹித் வெற்றி தேடித் தரும் பட்சத்தில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்றுக் கொடுத்த கேப்டன்கள் வரிசையில் கோலியை முந்தி இரண்டாம் இடம் பிடிப்பார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் தோனி இருக்கிறார்.

தோனி, கோலி வெற்றிகள்

தோனி, கோலி வெற்றிகள்

இந்திய அணியின் கேப்டனாக தோனி 72 போட்டிகளில் 41 வெற்றிகளும், கோலி 20 போட்டிகளில் 12 வெற்றிகளும் பெற்றுத் தந்துள்ளனர். குறைந்த பட்சம் ஐந்து போட்டிகளில் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில், வெற்றி சதவீத அடிப்படையில் பார்த்தால் ரோஹித் முதல் இடத்தில் இருக்கிறார். ரோஹித் - 91.66%, கோலி - 63.15%, தோனி - 59.28%.

நியூசிலாந்து மண்ணில் முதல் வெற்றி

நியூசிலாந்து மண்ணில் முதல் வெற்றி

இது தவிர நியூசிலாந்து மண்ணில் இந்தியா இதுவரை ஒரு டி20 போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை. ரோஹித் இந்த முறை ஒரு போட்டியில் வென்றால் கூட அது தோனி, கோலியால் செய்ய முடியாத வரலாற்று சாதனையாக இருக்கும். மேலும், இந்தியா நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரைக் கைப்பற்றினால் அதுவும் முதல் முறை நிகழ்வாக அமையும்.

நியூசி.க்கு எதிராக 2 வெற்றி

நியூசி.க்கு எதிராக 2 வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிராக எட்டு போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கோலி தலைமையில் 2017-18இல் இந்தியாவில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றி இருந்தது.

டி20 தொடரில் ரிஷப் பண்ட், க்ருனால்

டி20 தொடரில் ரிஷப் பண்ட், க்ருனால்

இந்தியா இந்த முறை தொடரில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்பதால் நிச்சயம் பல சாதனைகள் நிகழும். டி20 தொடரில் ஆட ஒருநாள் தொடரில் ஆடாத ரிஷப் பண்ட், க்ருனால் பண்டியா ஆகியோர் இந்திய அணியுடன் இணைந்துள்ளனர்.

Story first published: Tuesday, February 5, 2019, 12:13 [IST]
Other articles published on Feb 5, 2019
English summary
India vs Newzealand : Rohit Sharma can beat Kohli’s captaincy record in T20 series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+