For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிக்ஸர் அடிப்பதில் தோனியுடன் முதல் இடத்தை பிடித்த ரோஹித்.. ஒரே போட்டியில் 2 சாதனைகள்!

Recommended Video

தோனியுடன் முதல் இடத்தை பிடித்த ரோஹித், ஒரே போட்டியில் 2 சாதனைகள்- வீடியோ

மவுன்ட் மௌங்கனி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவராக வலம் வரும் ரோஹித் சர்மா தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறார்.

சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் அரைசதம் அடித்தார். அந்த போட்டியில் இரண்டு முக்கிய சாதனைகளை எட்டியுள்ளார் ரோஹித்.

அசத்தல் அரைசதம்

அசத்தல் அரைசதம்

மூன்றாவது போட்டியில் இந்தியா 244 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. இந்த போட்டியில் சிறப்பான துவக்கம் அளித்த ரோஹித் சர்மா 77 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். இதில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று ஃபோர்கள் அடங்கும்.

தோனியுடன் முதல் இடம்

தோனியுடன் முதல் இடம்

இரண்டு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் தோனியுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் ரோஹித் சர்மா.

தோனி அடித்த சிக்ஸர்கள்

தோனி அடித்த சிக்ஸர்கள்

தோனி ஒருநாள் போட்டிகளில் 222 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதில் 7 சிக்ஸர்கள் ஆசிய லெவன் அணிக்காக அடித்தது. அதை தவிர்த்து இந்திய அணிக்காக 215 சிக்ஸர்கள் அடித்துள்ளார். தற்போது இதே எண்ணிக்கையை ரோஹித் சர்மாவும் எட்டியுள்ளார்.

ரோஹித் ஐந்தாம் இடம்

ரோஹித் ஐந்தாம் இடம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ரோஹித் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் இந்திய அணிக்காக 215 சிக்ஸர்கள் அடித்து தோனியுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார் ரோஹித்.

லிஸ்ட் ஏ சாதனை

லிஸ்ட் ஏ சாதனை

சிக்ஸர் சாதனை தவிர்த்து லிஸ்ட் ஏ (அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகள்) போட்டிகளில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி அசத்தினார். இந்திய அளவில் வேகமாக 10,000 லிஸ்ட் ஏ போட்டி ரன்களை எடுத்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ரோஹித்.

இந்திய அளவில் நான்கு வீரர்கள்

இந்திய அளவில் நான்கு வீரர்கள்

இந்திய அளவில் விரைவாக 10,000 லிஸ்ட் ஏ ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் கோலி (219 இன்னிங்க்ஸ்), கங்குலி (252 இன்னிங்க்ஸ்), சச்சின் (257 இன்னிங்க்ஸ்), ரோஹித் சர்மா (260 இன்னிங்க்ஸ்) என முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளனர்.

ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பு

ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பு

நியூசிலாந்து ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் கோலி ஓய்வு பெறும் நிலையில் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். பேட்டிங் போலவே கேப்டன்சியிலும் ரோஹித் அசத்துவார் என்பதால் ரசிகர்கள் கடைசி இரு போட்டிகளை காண ஆவலுடன் உள்ளனர்.

Story first published: Tuesday, January 29, 2019, 13:43 [IST]
Other articles published on Jan 29, 2019
English summary
India vs Newzealand : Rohit Sharma continue to break records on Sixes and most run
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+