Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பரப்பு!! நியூசி. போட்டியில் இரட்டை சதம் அடிக்கப் போகும் ரோஹித் சர்மா.. எப்படி தெரியுமா?

ஹாமில்டன்: இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான்காவது போட்டியில் ஆட உள்ளது.

இந்த போட்டி ரோஹித் சர்மாவின் 200வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புதிய சாதனை ஒன்றையும் படைக்கும். அது குறித்து பார்க்கலாம்.

கேப்டன் கோலி ஓய்வு

கேப்டன் கோலி ஓய்வு

இந்திய அணியின் கேப்டன் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெரும் நிலையில், ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ரோஹித் சர்மா கேப்டனாக சிறப்பாக செயல்படுவார் என்பதால் கடைசி இரு போட்டிகளுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரோஹித் கேப்டன்

ரோஹித் கேப்டன்

மேலும், இது ரோஹித் சர்மாவின் 200வது போட்டி என்பதால் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் ரோஹித் கேப்டனாக செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒருநாள் போட்டிகளில்அதிக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமைக்குரிய ரோஹித் சர்மா, போட்டிகளில் ஆடுவதிலும் இரட்டை சதம் அடிக்க உள்ளார்.

ரோஹித் 200வது போட்டி

ரோஹித் 200வது போட்டி

ரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் ஆடுவதன் மூலம் 200 ஒருநாள் போட்டிகளில் ஆடிய 14வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். மேலும், சர்வதேச அளவில் 200 ஒருநாள் போட்டிகளில் ஆடிய 80வது வீரர் என்ற பெருமையையும் பெறுவார் ரோஹித் சர்மா.

தொடரில் சாதனை

தொடரில் சாதனை

இது தவிர இந்தியா நான்காவது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரில் 4-0 என்ற நிலையை அடையும். இதுவரை இந்தியா நியூசிலாந்து மண்ணில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதில்லை. நான்காவது போட்டியில் இந்தியா இந்த புதிய சாதனையை செய்யவும் அதிக வாய்ப்புள்ளது.

4வது இரட்டை சதம்

4வது இரட்டை சதம்

ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. இவர் தன் 200வது ஒருநாள் போட்டியில் தன் நான்காவது இரட்டை சதத்தை அடிப்பாரா?

Story first published: Wednesday, January 30, 2019, 19:10 [IST]
Other articles published on Jan 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+