Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.வில் ஓகே.. ஆனா நியூசிலாந்தில் ரோஹித்துக்கு கட்டம் சரியில்லை.. எப்படி தெரியுமா?

Recommended Video

நியூசிலாந்துக்கு எதிராக ரோஹித் ஷர்மாவின் செயல்பாடுகள்- வீடியோ

ஆக்லாந்து : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன ஒருநாள் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.

இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வரும் நிலையில், ரோஹித் சர்மாவின் கடந்த கால செயல்பாடுகள் கவலைக்குரியதாக உள்ளது.

ரோஹித் சர்மா பார்ம்

ரோஹித் சர்மா பார்ம்

ரோஹித் சர்மா பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருக்கிறார். ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் கூட சிறப்பான சதம் அடித்து அசத்தினார்.

நியூசிலாந்தில் சராசரி

நியூசிலாந்தில் சராசரி

ஆனால், நியூசிலாந்தில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி அத்தனை சிறப்பாக இல்லை. நியூசிலாந்து மண்ணில் 16 இன்னிங்க்ஸ்களில் 533 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. இதன் சராசரி 35.53 மட்டுமே.

ரோஹித்தின் பலவீனம்

ரோஹித்தின் பலவீனம்

நியூசிலாந்து தவிர வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் ரோஹித் சர்மா மோசமான சராசரி வைத்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், ரோஹித் சர்மா இந்த குறையை போக்க வேண்டும்.

நிரூபிக்க வேண்டும்

நிரூபிக்க வேண்டும்

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. நியூசிலாந்து ஆடுகளம் இங்கிலாந்தை போலவே இருக்கும் என்பதால், ரோஹித் சர்மா நியூசிலாந்து தொடரில் ரன் குவித்து தன்னால் இந்த ஆடுகளங்களில் ஆட முடியும் என நிரூபிக்க வேண்டும்.

Story first published: Monday, January 21, 2019, 20:07 [IST]
Other articles published on Jan 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+