Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் போட்டியில் நடக்கலை.. 2வது போட்டியில் நடக்குமா? முதல் இடம் பிடிப்பரா ரோஹித்?

ஆக்லாந்து : ரோஹித் சர்மா இன்னும் 35 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை செய்வார்.

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் இந்த சாதனையை நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

35 ரன்கள் தேவை

35 ரன்கள் தேவை

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனை நியூசிலாந்தின் மார்டின் குப்டில் வசம் உள்ளது. அவரை முந்தி முதல் இடத்தை பிடிக்க ரோஹித் சர்மாவிற்கு 35 ரன்கள் மட்டுமே தேவை.

ரோஹித் மூன்றாம் இடம்

ரோஹித் மூன்றாம் இடம்

அதிக டி20 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா தற்போது மூன்றாம் இடத்தில் 2238 ரன்களுடன் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் 2263 ரன்களுடனும், முதல் இடத்தில் நியூசிலாந்தின் மார்டின் குப்டில் 2272 ரன்களுடனும் இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு பார்ம்

கடந்த ஆண்டு பார்ம்

ரோஹித் சர்மா கடந்த ஆண்டு சிறப்பாக ரன் குவித்தார். 18 இன்னிங்க்ஸ்களில் 590 ரன்கள் குவித்து அந்த ஆண்டில் அதிக டி20 ரன் குவித்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தார். மேலும், கடந்த ஆண்டு மட்டும் இரண்டு டி20 போட்டி சதம் அடித்தார்.

முதல் போட்டியில் இல்லை

முதல் போட்டியில் இல்லை

அதே பார்மில், இந்த ஆண்டு நியூசிலாந்து டி20 தொடரின் முதல் போட்டியில் 35 ரன்கள் அடித்து மார்டின் குப்டில்-ஐ முந்துவார் என எதிர்பார்த்த நிலையில், முதல் போட்டியில் ரோஹித் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினார். இந்நிலையில், இரண்டாவது போட்டியிலாவது இந்த சாதனையை நிகழ்த்துவாரா ரோஹித்?

Story first published: Thursday, February 7, 2019, 19:16 [IST]
Other articles published on Feb 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+