Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாஹாவுக்கு திடீரென ஏற்பட்ட காயம்.. அவசரமாக அழைக்கப்பட்ட இளம் வீரர்.. முதல் டெஸ்டில் பின்னடைவு!

கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 345 ரன்களை சேர்த்துள்ளது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. இதனால் இரண்டாவது நாள் முடிவுவரை விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்திருந்தது. ஓப்பனர்கள் டாம் லதாம் 50 (165), வில் யங் 75 (180) ஆகியோர் களத்தில் இருந்தார்கள். வலுவான சூழலில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திடீர் மாற்றங்கள்

திடீர் மாற்றங்கள்

ஃபீல்டிங்கிற்காக இந்திய வீரர்கள் அனைவரும் களத்திற்குள் வந்த போது, ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியப்படும் விஷயம் இன்று நடந்தது. அதாவது ப்ளேயிங் 11ல் இடம்பெற்றிருந்த விருதிமான் சாஹாவுக்கு பதிலாக ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த கே.எஸ். பரத் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். இவர் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் 14ஆவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடியிருந்தார்.

காரணம் என்ன

காரணம் என்ன

சாஹாவுக்கு என்ன ஆனது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது விருதிமான் சஹாவுக்கு கழுத்து பகுதியில் திடீரென வலி ஏற்பட்டுள்ளது எனவும், அவர் ஓய்வுக்கு சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் இனி இந்த போட்டியில் களமிறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.

Recommended Video

Ashwin and Nitin in Heated Debate, Rahane Intervenes | IND vs NZ Kanpur Test | OneIndia Tamil
இந்தியாவுக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு பின்னடைவு

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 200 ரன்களை கடந்துவிட்டதால், இந்திய அணியின் ஸ்கோருக்கு அருகில் செல்ல வாய்ப்புள்ளது. எனவே 2வது இன்னிங்ஸில் இந்திய அணி அதிக ஸ்கோரை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் சாஹா காயத்தால் அவதிப்படுவது அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, November 27, 2021, 13:32 [IST]
Other articles published on Nov 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+