Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் எடுத்த அந்த ஒரு முடிவு.. இந்திய அணியின் எதிர்காலத்தையே மாற்றும்.. அடித்துக்கூறும் ஜாகீர் கான்

கொல்கத்தா: இந்திய அணியின் எதிர்காலத்திற்காக ரோகித் சர்மா செய்த முக்கிய விஷயத்தை ஜாகீர் கான் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Recommended Video

Rohit Sharma-ன் முடிவு Indian Team-ன் எதிர்காலத்தை மாற்றும் - Zaheer Khan

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த தொடரில் இந்திய அணி 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.

ரோகித் கேப்டன்சி

ரோகித் கேப்டன்சி

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றோடு வெளியேறிய பின்னர் விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா முழு நேர கேப்டனாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அந்தவகையில் தனது முதல் தொடரிலேயே அபார வெற்றியை ரோகித் பெற்று கொடுத்ததால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜாகீர் நம்பிக்கை

ஜாகீர் நம்பிக்கை

இந்நிலையில் இந்த தொடரில் ரோகித் சர்மா எடுத்துவரும் முடிவுகள் அடுத்த உலகக் கோப்பை தொடரை அவர் குறிவைத்துள்ளது தெரிவதாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி தற்போது அடுத்த உலகக் கோப்பை தொடருக்காக ஆயத்தமாகி வருகிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் ரோகித் சர்மா எடுக்கும் சில முடிவுகள் எனக்கு அதைத்தான் ஞாபகப்படுத்துகின்றன.

ரோகித் எடுத்த ரிஸ்க்

ரோகித் எடுத்த ரிஸ்க்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் வெங்கடேஷ் ஐயரை 3வது வீரராக களமிறக்கி அவர் ஒரு பரிசோதனையை நிகழ்த்தினார். அவரின் அந்த முடிவிலேயே, ரோகித் சர்மா அடுத்த உலகக் கோப்பையை குறி வைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் தீடீர் திடீரென அணி வீரர்களை வேறு வரிசையில் களமிறக்கி பரிசோதனை செய்வது அடுத்த உலகக்கோப்பை தொடரில் வீரர்களின் பேட்டிங் வரிசைக்கு பிரச்னையில்லாமல் இருக்கும்.

எதிர்காலம்

எதிர்காலம்

அதுமட்டுமின்றி முக்கியமான போட்டிகளில் விக்கெட்டுகள் சரிந்து இக்கட்டான சூழ்நிலைகள் உருவானால், பேட்டிங் ஆர்டரை மாற்றி களமிறக்கும் முறைகள் பெரியளவில் கைக்கொடுக்கும். இந்த காரணத்தினால் தான் வீரர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளை ரோகித் வழங்குவதாக தெரிகிறது. என்னை பொறுத்தவரை ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் ஆகியோரது ஆளுமை இந்திய அணிக்கு நல்ல எதிர்காலத்தை தரும் என ஜாஹீர் கான் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 22, 2021, 15:21 [IST]
Other articles published on Nov 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+