Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவிற்கு குட் நியூஸ்.. நியூசி டீமில் இருந்து வெளியேறிய "உயர்ந்த மனிதர்".. மேட்ச் இனி ஈசிதான்!

ஜெய்ப்பூர்: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் தொடங்குகிறது.டி-20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றிலிருந்து இந்தியா விலகியது.

Recommended Video

Team India sets well under Rohit - Dravid combo | IND vs NZ | OneIndia Tamil

இதனால் நியூசிலாந்து தொடரில் வென்று இழந்த பெருமையை மீட்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் உள்ளனர்.

மேலும் பயிற்சியாளராக டிராவிட், கேப்டனாக ரோகித் சர்மா என புதிய கூட்டணியுடன் இந்தியா களமிறங்குகிறது.

வில்லியம்சன்

வில்லியம்சன்

டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணி, 2 நாள் இடைவெளியில் இந்தியாவுடன் விளையாடுகிறது.இதனால் மனது மற்றும் உடல் அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் ஏற்கனவே டி-20 போட்டியிலிருந்து கேப்டன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

உயர்ந்த மனிதன்

உயர்ந்த மனிதன்

இதே போன்று நியூசிலாந்து அணியின் உயர்ந்த மனிதனும், வேகப்பந்துவீச்சாளருமான கைல் ஜேமிசன் தற்போது டி-20 தொடரிலிருந்து விலகியுள்ளார். வரும் 25ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜேமிசன் தெரிவித்துள்ளார். ஜேமிசன் இல்லாதது நியூசிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உத்தேச அணி

உத்தேச அணி

இன்றைய ஆட்டத்தில் உத்தேச நியூசிலாந்து அணி 1, குப்தில் 2, டேரல் மிட்செல், 3. பிலிப்ஸ், 4. மார்க் சாப்மேன், 5. டிம் செய்பிர்ட் (விக்கெட் கீப்பர்) , 6. ஜேம்ஸ் நீஷம், 7. மிட்செல் சாட்னர், 8. ஆடம் மிலின் 9, டிம் செளதி(கேப்டன்) 10.லோக்கி பெகுர்சன். 11, இஷ் சோதி

 டிம் செளதி

டிம் செளதி

இன்றைய ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள செளதி, உலகக் கோப்பையை தோற்றது குறித்து யோசிக்க கூட நேரமில்லை, அதற்குள் மீண்டும் ஒரு தொடரில் விளையாடுகிறோம். இருப்பினும் நியூசிலாந்து அணிக்காக விளையாடுவதே பெருமை தான். இந்தியாவை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார்.

மார்டின் குப்தில்

மார்டின் குப்தில்

சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் குப்தில்( 3147 ) 2வது இடத்திலும் , ரோகித் சர்மா (3038ல் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.இந்த தொடரில் இருவருமே முதலிடத்தில் உள்ள கோலியை (3227) பின்னுக்கு தள்ள வாய்ப்பு உள்ளது.

ஆபத்தான வீரர்கள்

ஆபத்தான வீரர்கள்

நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடியாகவும் விளையாட கூடியவர்கள், சூழலுக்கு ஏற்றார் போன்றும் விளையாடக் கூடியவர்கள். குப்தில், டேரல் மிட்செல், டிம் செய்ஃபர்ட்,ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் இந்திய அணிக்கு ஆபத்தை அளிக்க கூடியவர்கள். இதே போன்று பெகுர்சன் முழு உடல் தகுதியை பெற்றால் தனது அனல் பறக்கும் வேகத்தால் இந்தியாவுக்கு நெருக்கடி அளிப்பார்.

Story first published: Wednesday, November 17, 2021, 19:57 [IST]
Other articles published on Nov 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+