Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs பாகிஸ்தான்-இரு அணிக்கும் இடையே ஒருநாள் போட்டிகள்,ICC தொடர்களில் அதிக வெற்றி பெற்றது யார்?

துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் பல பரிட்சை நடத்துகிறது. 2023 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் பல பரிட்சை நடத்துகிறது. இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவி இருக்கிறது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வாழ்வா சாவா ஆட்டமாக இந்தியாவுக்கு எதிராக அமைந்திருக்கிறது. இந்த சூழலில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தான் அணியும் எத்தனை முறை மோதி இருக்கிறார்கள். இதில் யார் அதிக வெற்றியை பெற்று இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

Champions Trophy 2025 Ind vs Pak Virat kohli Rohit sharma vs

இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை 135 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிருக்கிறார்கள். இதில் இந்திய அணி 57 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 73 போட்டிகளிலும் வெற்றியை பெற்றிருக்கிறது. 5 போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்து இருக்கிறது. இரு அணிகளும் 1978 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி குயோட்டா நகரில் முதல் முறையாக மோதியது.

இதில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் 2012 13-ஆம் ஆண்டுக்கு பிறகு இருதரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது கிடையாது. இதுவரை இரு அணிகளும் 17 இருதரப்பு தொடர்களின் விளையாடி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணியே 11 தொடர்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணி வெறும் ஐந்து தொடரில் தான் வென்றிருக்கிறது.

2006 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஒரு தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. எனினும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கிறது. இதுவரை இந்தியாவும், பாகிஸ்தானும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் எட்டு முறை மோதி இருக்கிறது. இதில் எட்டு முறையும் இந்திய அணியே வெற்றி பெற்று இருக்கிறது.

பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கையே ஓங்கி இருக்கிறது. இதில் இரு அணிகளும் ஐந்து முறை மோதி இருக்கிறார்கள். இதில் பாகிஸ்தான் அணி மூன்று முறையும், இந்திய அணி இரண்டு முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற ஆறு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது ஒரு போட்டி மழையால் ரத்தாகி இருக்கிறது.

Story first published: Friday, February 21, 2025, 21:16 [IST]
Other articles published on Feb 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+