Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பகையே காத்திரு ! மீண்டும் மோதும் இந்தியா Vs பாகிஸ்தான்.. இம்முறை யாருக்கு சாதகம் ? முழு விவரம்

துபாய் : ஆசிய கோப்பை தொடரில் குரூப் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தன. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Recommended Video

Asia Cup 2022 SL vs BAN: Chris Silverwood-ன் Secret Code சொல்வது என்ன? | Aanee's Appeal

இந்த நிலையில், நாளை ஞாயிற்றுகிழமை மீண்டும் இந்தியாவும், பாகிஸ்தானும் ரவுண்ட் 2வில் மோதுகிறது.

குரூப் சுற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவிய நிலையில், பதிலடி தரும் முனைப்பில் பாகிஸ்தான் உள்ளதால், இந்த ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்தியாவின் குறை

இந்தியாவின் குறை

குரூப் சுற்றில் பலமான அணியாக இருந்த இந்தியாவுக்கு தற்போது சாதகமான சூழல் நிலவவில்லை என்பதே உண்மை. அணியின் முக்கிய வீரரான ஜடேஜா காயம் காரணமாக விலகிவிட்டார். மேலும் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளரான ஆவேஷ் கானும், ஆர்ஸ்தீப் சிங்கும் ஹாங்காங்க்கு எதிராக 8 ஓவரில் 97 ரன்கள் கொடுத்துள்ளனர்.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

இதில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் அரைசதம் அடித்துவிட்டார். மேலும் தொடக்க வீரர் கேஎல் ராகுல் ஃபார்ம் பரிதாபமான நிலையில் உள்ளது. கத்துக்குட்டி அணியிடம் 36 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். ஹாங்காங் அணி பேட்ஸ்மேன்களையே 151 ரன்களை இந்திய வீரர்கள் அடிக்கவிட்டனர்.இதுவே பலமான அணியை எதிர்கொண்டால் நிலைமை என்னவாகும்.

பாகிஸ்தான் பலம்

பாகிஸ்தான் பலம்

ஆனால் மறுபுறும் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அனைத்து பிரிவிலும் டாப் கிளாசாக உள்ளது. கேப்டன் பாபர் அசாம் மட்டும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. மற்ற படி ரிஸ்வான், ஃபக்கர் ஷமான், குஸ்தில் ஷா போன்ற வீரர்கள் ஹாங்காங்க்கு எதிராக தங்களது பார்மை மீட்டு விட்டனர். 193 ரன்களை விளாசியதன் மூலம் பேட்டிங்கில் அந்த அணி நல்ல உத்வேகத்துடன் உள்ளது.

சவாலுக்கு தயார்

சவாலுக்கு தயார்

இதற்கு எல்லாம் மேலாக, ஹாங்காங் அணியை 38 ரன்களில் சுருட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அசுர பலத்துடன் உள்ளனர். வேகப்பந்தவீச்சு, சுழற்பந்தவீச்சு என மிரட்டும் பாகிஸ்தான் வீரர்கள் தற்போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள். மனதளவில் தற்போது பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இந்தியா தங்களது குறையை நிவர்த்தி செய்துவிட்டு வெற்றியை தொடருமா இல்லை பாகிஸ்தான் பதிலடி தருமா என்பது நாளை தெரிந்துவிடும்.

Story first published: Saturday, September 3, 2022, 0:20 [IST]
Other articles published on Sep 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+