IND vs PAK: பாகிஸ்தான் போட்டியில் மாபெரும் சாதனை படைத்த ஹர்திக்.. அதிக விக்கெட் வீழ்த்தி ரெக்கார்டு
துபாய்: பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த 2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்டியா மாபெரும் சாதனை படைத்து அசத்தியுள்ளார். இந்த போட்டியின் மூலம், ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்த புவனேஷ்வர் குமார்-ஐ அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இந்தப் போட்டியின் இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில், பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான்-ஐ ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் 'கேட்ச்' கொடுத்து ஜமான் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆசிய கோப்பை டி20 போட்டிகளில் தனது 14-வது விக்கெட்டை பதிவு செய்தார். இந்த ஒரு விக்கெட், ஹர்திக் பாண்டியாவை வரலாற்று சாதனை பட்டியலில் இடம்பெறச் செய்தது.

ஆசிய கோப்பை டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள்:
- ஹர்திக் பாண்டியா: 12* போட்டிகள், 14 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 3/8
- புவனேஷ்வர் குமார்: 6 போட்டிகள், 13 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 5/4
- ஜஸ்பிரித் பும்ரா: 8* போட்டிகள், 9 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 2/27
- குல்தீப் யாதவ்: 4* போட்டிகள், 8 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 4/7
- ரவிச்சந்திரன் அஸ்வின்: 6 போட்டிகள், 6 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 2/26
ஆசிய கோப்பை டி20 தொடரில் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் முதலிடம்:
ஹர்திக் பாண்டியா இந்த சாதனையை நிகழ்த்தியதோடு, ஆசிய கோப்பை டி20 வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் இலங்கையின் வனிந்து ஹசரங்கா-வுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மூவரும் தலா 14 விக்கெட்டுகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்த போட்டியில் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், ஹர்திக் பாண்டியா தனித்து முதலிடத்தைப் பிடிப்பார்.
- ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்): 11 போட்டிகள், 14 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 3/22
- வனிந்து ஹசரங்கா (இலங்கை): 10 போட்டிகள், 14 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 3/21
- ஹர்திக் பாண்டியா (இந்தியா): 12* போட்டிகள், 14 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 3/8
- புவனேஷ்வர் குமார் (இந்தியா): 6 போட்டிகள், 13 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 5/4
- அம்ஜத் ஜாவேத் (யுஏஇ): 7 போட்டிகள், 12 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 3/25
IND vs PAK: கடைசி 8 பந்தில் வெறியாட்டம் ஆடிய பாகிஸ்தான் வீரர் அஷ்ரஃப்.. கைகொடுத்த துபே
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச விக்கெட் வீழ்த்திய வீரர்:
ஃபக்கர் ஜமான்-இன் விக்கெட், ஹர்திக் பாண்டியாவின் சர்வதேச டி20 விக்கெட்டுகளின் எண்ணிக்கையை 97 ஆக உயர்த்தியது. இதன் மூலம், இதுவரை 96 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த யுஸ்வேந்திர சாஹல்-ஐ முந்தி, சர்வதேச டி20 அரங்கில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் ஓமனுக்கு எதிரான போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அர்ஷ்தீப் சிங்: 64 போட்டிகள், 100 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 4/9
- ஹர்திக் பாண்டியா: 118* போட்டிகள், 97 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 4/16
- யுஸ்வேந்திர சாஹல்: 80 போட்டிகள், 96 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 6/25
- ஜஸ்பிரித் பும்ரா: 73* போட்டிகள், 92 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 3/7
- புவனேஷ்வர் குமார்: 87 போட்டிகள், 90 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 5/4


Click it and Unblock the Notifications