இந்தியா - பாகிஸ்தான் ஹாங்காங் சிக்ஸஸ் போட்டி எப்போது தொடங்கும்? லைவ் மேட்ச் பார்ப்பது எப்படி?
மாங் காக்: 2026 ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடரில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 30 அன்று நேருக்கு நேர் களம் காண்கின்றன. மாங் காக்கில் உள்ள மிஷன் ரோடு மைதானத்தில் நடைபெறும் இந்த குரூப் சி லீக் ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்த வெற்றியுடன் தொடரைத் தொடங்க முனைப்பு காட்டி வருகிறது.
அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை நடைபெறும் இந்த 22-வது ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் மொத்தம் 12 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் தலா 3 அணிகள் வீதம் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் சி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் ஐக்கிய அரபு அமீரக அணியும் இடம்பெற்றுள்ளது. ஒரு அணிக்கு 6 வீரர்கள் மட்டுமே விளையாடுவர். ஒரு இன்னிங்ஸுக்கு 6 ஓவர்கள் வீசப்படும் என்பதால் போட்டி முழுவதும் சிக்சர் மழையாக இருக்கும். நாக் அவுட் சுற்றுகளுக்குப் பிறகு நவம்பர் 1 அன்று இறுதிப்போட்டி நடைபெறும்.

இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர் குருணால் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார். அவருடன் அதிரடி வீரர்கள் ஷஷாங்க் சிங், ராகுல் தெவாதியா, நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தமிழக யார்க்கர் மன்னன் டி.நடராஜன் மற்றும் குல்வந்த் கெஜ்ரோலியா ஆகியோர் அணியில் உள்ளனர். பாகிஸ்தான் அணியை வேகப்பந்து வீச்சாளர் அப்பாஸ் அப்ரிடி வழிநடத்துகிறார். அவருடன் அப்துல் சமத், அகமது டானியல், முகமது இர்ஃபான் கான் உள்ளிட்ட இளம் வீரர்கள் களமிறங்குகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் ஹாங்காங் சிக்ஸஸ் போட்டி எத்தனை மணிக்கு நடைபெறும்?
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டி இன்று அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி காலை 11:45 மணிக்கு தொடங்குகிறது. ஹாங்காங் நேரப்படி மதியம் 2:15 மணிக்கு ஆரம்பமாகும்.
இந்தியா - பாகிஸ்தான் ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியை எந்த தொலைக்காட்சி, ஸ்ட்ரீமிங் தளத்தில் பார்க்கலாம்?
இப்போட்டியை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரலையாக ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். செல்போன் மற்றும் இணையதளத்தில் பார்க்க விரும்புவோர் ஃபான்கோட் செயலி மற்றும் இணையதளத்தின் வாயிலாக நேரடியாகப் பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications

