For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா - பாகிஸ்தான் பிளேயிங் 11.. அஸ்வின் வேண்டவே வேண்டாம்.. ரோஹித் ட்விஸ்ட்.. காரணமே இதுதான்

அகமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கேப்டன் ரோஹித் சர்மா வாய்ப்பு அளிக்க மாட்டார் என தகவல் கசிந்துள்ளது.

2023 உலகக்கோப்பை லீக் சுற்றில் மிக முக்கியமான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டி நடைபெறும் அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏற்ற ஆடுகளம். கருப்பு மணல் கொண்டு தயார் செய்யப்பட்ட பிட்ச்சில் தான் போட்டி நடைபெற உள்ளது. அதனால், பேட்டிங் செய்ய ஏற்றதாக இருக்கும். இந்த நிலையில், இந்தியா மூன்று ஸ்பின்னர்களை அணியில் சேர்ப்பது ஆபத்தான விஷயமாக இருக்கும்.

INDIA vs PAKISTAN : Inda playing XI - Ravichandran Ashwin wont get a chance

எனவே, ரோஹித் சர்மா ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இரண்டு ஸ்பின்னர்களை மட்டுமே அணியில் சேர்க்க உள்ளார். அஸ்வினுக்கு இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா வாய்ப்பு அளிக்க மாட்டார்.

அதே போல, வேகப் பந்துவீச்சாளர்களில் பும்ரா, முகமது சிராஜ் இந்தப் போட்டியில் ஆடப் போவது உறுதி. ஆனால், மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஷர்துல் தாக்குர் - முகமது ஷமி இடையே எப்போதும் இந்திய அணியில் போட்டி நிலவி வரும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா எப்போதும் தாக்குரையே அணியில் தேர்வு செய்து வருகிறார்.

எனவே, இந்தியா - பாகிஸ்தான் போட்டியிலும் ஷர்துல் தாக்குர் அணியில் இடம் பெறவே வாய்ப்பு அதிகம். எனினும், முன்னாள் வீரர்கள் பலர் முகமது ஷமியை தான் இந்தியா தேர்வு செய்ய வேண்டும். அவர் தன் அனுபவ பந்துவீச்சின் மூலம் அணிக்கு வெற்றி தேடித் தருவார் என கூறி வருவதால் ஷமி இந்தப் போட்டியில் ஆடவும் சிறிய வாய்ப்பு உள்ளது.

அது போல, கடந்த இரண்டு போட்டிகளில் காய்ச்சல் காரணமாக ஆடாத சுப்மன் கில் இந்தப் போட்டியில் ஆடுவதற்கு தயாராகி விட்டார் என ரோஹித் சர்மா பேட்டியில் கூறி இருந்தார். அதன் அடிப்படையில் சுப்மன் கில் இந்தப் போட்டியில் துவக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியில் களமிறங்க உள்ள உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே கேல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

Story first published: Saturday, October 14, 2023, 5:47 [IST]
Other articles published on Oct 14, 2023
English summary
INDIA vs PAKISTAN : Inda playing XI - Ravichandran Ashwin won't get a chance as Rohit Sharma ges with Three pace bowlers.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+