Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் ஆயுதம்.. இறக்கினால் பாகிஸ்தான் காலி.. இவரை டீமில் வைத்திருக்கும் காரணமே இதுதான்

அகமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்க உள்ள உலகக்கோப்பை போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டால் அது பாகிஸ்தான் அணிக்கு சிக்கலாக மாறும்.

குறிப்பாக, இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் சூர்யகுமார் யாதவ் கடைசி 10 ஓவர்களில் ஸ்கோரை மிக வேகமாக உயர்த்தி விடுவார்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற் உள்ள அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏற்றது. மேலும், அங்கே 300 ரன்களுக்கு மேல் எடுக்க முடியும் என விமர்சர்கர்கள் கூறுகின்றனர்.

INDIA vs PAKISTAN : Suryakumar Yadav would thrash Pakistan if he plays

எனவே, சூர்யகுமார் யாதவை இந்தப் போட்டியில் தேர்வு செய்ய சிறிய அளவில் வாய்ப்பு உள்ளது. ஆனால், அவரை இந்திய அணியில் களமிறக்கும் முடிவு ரோஹித் சர்மா - டிராவிட் கைகளில் தான் இருக்கிறது.

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் ஏன் சேர்க்கப்பட்டார் என்ற கேள்வி பலருக்கும் உண்டு. டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டத்தால் உலகையே மிரள வைத்த அவரால் ஒருநாள் போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ஆனால், அவரை உலகக்கோப்பை அணியிலும் தேர்வு செய்யும் அளவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்கு காரணம், அவர் உலகக்கோப்பை தொடரின் எந்த ஒரு போட்டியிலும் திடீரென அணியில் ஆட வைக்கப்படலாம். அவரை திருப்புமுனை வீரராக நம்புகிறது ரோஹித் - டிராவிட் கூட்டணி.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியில் அவர் ஆடும் வாய்ப்பு குறைவு. ஆனால், அவர் ஒருவேளை இந்தப் போட்டியில் ஆடி, அதிலும் தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் பாகிஸ்தான் அணி நிலைமை மிக மோசமாக மாறிவிடும்.

பொதுவாக சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் மிடில் ஓவர்களில் இறங்கினால் அடித்து ஆட ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார் என்ற விமர்சனம் உள்ளது.

ஆனால், உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா ஆடிய ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவர் பொறுப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருப்பதால், நிச்சயம் அவர் இக்கட்டான நிலையில் நிதான ஆட்டத்தையும் ஆடுவார்

ஆனால், இவரை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்றால் ஷ்ரேயாஸ் ஐயரை நீக்க வேண்டும். அது கொஞ்சம் ஆபத்தான முடிவு தான். ஆனாலும், ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் அவரை நீக்குவது சாத்தியம் தான்.

Story first published: Saturday, October 14, 2023, 7:38 [IST]
Other articles published on Oct 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+