Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேசாமல் 3வது இடத்துக்கே போயிடு சிவாஜி.. தொடக்க வீரராக தடுமாறும் விராட் கோலி! அந்த ரெக்கார்ட் பாருங்க

நியூ யார்க் : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்கியது. ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக மழை அவ்வப்போது கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டியது.

இதனால் வீரர்களும் பேட்டிங் செய்ய முடியாமல் கடுப்பாகினர். இந்த நிலையில் ஏற்கனவே இந்திய அணி டாசை இழந்து கள சூழல் பாதகமாக இருக்கும் நிலையில் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது.

t20 world cup ind vs pak hardik pandya rohit sharma virat kohli indian national cricket team cricke

தொடக்க வீரராக விராட் கோலி, ரோஹித் சர்மா உடன் களமிறங்கினார். இது விராட் கோலிக்கு புதிய இடம் ஆகும். ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக களம் இறங்கும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதுமே நம்பர் 3வது வீரராக தான் இருக்கின்றார். ரோகித் சர்மா பவுண்டரி,சிக்சர் என அடித்து ஆட விராட் கோலி ஒரு பவுண்டரி மட்டும்தான் அடித்தார்.

இதனால் வெறும் மூன்று பந்துகளை எதிர் கொண்ட விராட் கோலி 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 1 ரன் மட்டும் தான் எடுத்திருந்தார். இந்த நிலையில் விராட் கோலி நம்பர் மூன்றாவது வீரராக களமிறங்குவது தான் அவருக்கு சரியானதாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றது.

இதுவரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி நான்கு முறை மட்டுமே ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்திருக்கிறார். இதில் விராட் கோலி நம்பர் மூன்றாவது வீரராக ஒரு இன்னிங்சில் களமிறங்கி ஒரே ஒரு முறை தான் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்திருக்கிறார். மற்ற பேட்டிங் வரிசையில் களமிறங்கி மூன்று இன்னிங்ஸில் மூன்று முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்திருக்கிறார்.

இதனால் நீ பேசாம அமெரிக்காவுக்கே போய் விடு சிவாஜி என்பது போல் விராட் கோலியை மூன்றாவது இடத்தில் அனுப்பி விடுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை இருக்கிறார்கள். இன்னும் இந்திய அணி லீக் ஆட்டத்தில் இரண்டு கத்துக்குட்டி அணிகளுடன் மோத இருக்கிறது. அதிலாவது விராட் கோலி பெரிய ஸ்கோர் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Story first published: Sunday, June 9, 2024, 22:17 [IST]
Other articles published on Jun 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+