For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன மைதானம் இது.. இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஆட்டம் நிறுத்தம்.. பாம்பை தொடர்ந்து மற்றொரு சம்பவம்

கவுகாத்தி : இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி 2வது முறையாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.

 India vs Sa 2nd t20 – Match stopped due to light failure

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 61 ரன்கள் விளாசினார்.

விராட் கோலி 49 ரன்கள் எடுக்க, கேஎல் ராகுல் 53 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோகித் சர்மா தன் பங்கிற்கு 43 ரன்கள் சேர்த்தார்.

இதனையடுத்து இந்தியா விளையாடும் போது திடீரென்று மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு. உடனடியாக மைதான ஊழியர்கள், விரைந்து வந்து பாம்பை அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் போட்டி தொடர்ந்தது.

இந்த நிலையில், 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. பெவுமா டக் அவுட்டாக, ரூசோவ் டக் அவுட்டாக, தென்னாப்பிரிக்க அணி 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. 2 விக்கெட்டுகளையும் இந்திய வீரர் ஆர்ஸ்தீப் சிங் வீழ்த்தினார்.

அப்போது திடீரென்று மைதானத்தில் இருந்த மின் விளக்குகள் திடீரென்று எரியாமல் அணைந்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது, இதனைத் தொடர்ந்து மைதான ஊழியர்கள் விளக்குகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பணக்கார விளையாட்டு வாரியமாக விளங்கும் பிசிசிஐ கீழ் உள்ள மைதானங்கள் இந்த நிலைமையில் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Story first published: Sunday, October 2, 2022, 21:36 [IST]
Other articles published on Oct 2, 2022
English summary
India vs Sa 2nd t20 – Match stopped due to light failure என்ன மைதானம் இது.. இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஆட்டம் நிறுத்தம்.. பாம்பை தொடர்ந்து மற்றொரு சம்பவம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+