Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேரத்தில் டிவிஸ்ட்..காயத்தால் முக்கிய வீரர் விலகல்… சமாளிக்குமா இந்தியா?

லக்னோ: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியிலிருந்து 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பின்னடைவு

பின்னடைவு

இந்திய அணியை பொறுத்தவரை பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியை முழுமையாக வீழ்த்திய உத்வேகத்துடன் உள்ளனர். இருப்பினும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியகுமார் யாதவும் காயம் காரணமாக விலகியுள்ளது பின்னடைவாக கருதப்படுகிறது.

திரும்பிய நட்சத்திரங்கள்

திரும்பிய நட்சத்திரங்கள்

எனினும் ஜடேஜா, பும்ரா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது சாதகமாக பார்க்கப்படுகிறது. தொடக்க வீரராக இஷான் கிஷன் களமிறங்க உள்ளார். ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதாக ரோகித் சர்மா தெரிவித்தார். அறிமுக வீரராக தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி

இலங்கை அணி

இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குகிறோம். அதனை இளைஞர்கள் சரியாக பயன்படுத்தி கொள்வார்கள் என்று நம்புவதாக ரோகித் கூறினார். ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் 37 ரன்கள் அடித்தால், சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இலங்கை அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியிடம் 4க்கு1 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்துள்ளது. எனினும் இந்திய சூழலில் அந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது அசலங்காசந்திமால், சானுக்கா போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். உள்ளனர்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தாலும், பனிப்பொழிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய உத்தேச அணி, 1, இஷான் கிஷன், 2, ரோகித் சர்மா, 3, சஞ்சு சாம்சன், 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, வெங்கடேஷ் ஐயர், 6, தீபக் ஹூடா 7, ஜடேஜா, 8, ஹர்சல் பட்டேல், 9, புவனேஸ்வர் குமார் , 10, பும்ரா, 11, சாஹல்

Story first published: Thursday, February 24, 2022, 18:49 [IST]
Other articles published on Feb 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+