Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டி20 எத்தனை மணிக்கு தொடங்கும்? டாஸ் எத்தனை மணிக்கு?

கட்டாக்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2026 டி20 உலகக்கோப்பைக்குத் தயாராகும் வகையில் இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 2024 டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு அனைத்து டி20தொடர்களையும் வென்று அசுர ஃபார்மில் உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்ற உற்சாகத்துடன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமே வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் வருகைதான். ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த அவர், டி20 தொடரில் களம் இறங்குகிறார். அதேபோல கழுத்து வலியிலிருந்து குணமாகி வரும் துணை கேப்டன் சுப்மன் கில்லும் அணியில் உள்ளது கூடுதல் பலம்.

India vs South Africa 1st T20 Live Suryakumar Yadav s Men Eye Dominant Start in Cuttack

திணறும் தென்னாப்பிரிக்கா

மறுபுறம் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் சில கவலைகள் உள்ளன. அதிரடி வீரர் டோனி டி சோர்ஸி மற்றும் இளம் பந்துவீச்சாளர் குவேனா மாபகா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். முக்கிய பந்துவீச்சாளர் ரபாடாவும் இல்லாதது அந்த அணிக்குச் சவாலாக இருக்கும். இருப்பினும், டி காக், கிளாசன் போன்ற டி20 ஸ்பெஷலிஸ்டுகள் இருப்பதால் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

போட்டி விவரங்கள்

போட்டி: இந்தியா vs தென்னாப்பிரிக்கா (முதல் டி20)
தேதி: டிசம்பர் 9, 2025 (செவ்வாய்க்கிழமை - இன்று)
இடம்: பாரபதி ஸ்டேடியம், கட்டாக்.
டாஸ் நேரம்: மாலை 6:30 மணி.
போட்டி தொடங்கும் நேரம்: இந்திய நேரப்படி இரவு 7:00 மணி.

எந்த சேனலில் பார்க்கலாம்?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Star Sports Network) சேனல்களில் நேரலையாகக் கண்டு ரசிக்கலாம். தமிழ் வர்ணனையுடனும் போட்டியைப் பார்க்கும் வசதி உள்ளது.

மொபைலில் பார்ப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்பில் போட்டியைப் பார்க்க விரும்புபவர்கள், ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலி (App) மற்றும் இணையதளத்தில் நேரலையில் பார்க்கலாம்.

வீரர்கள் பட்டியல்:

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.

தென்னாப்பிரிக்கா அணி:

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், கார்பின் போஷ், டெவால்ட் பிரேவிஸ், குயின்டன் டி காக், டோனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ரிக்ஸ், மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, லுங்கி இங்கிடி, ஆன்ரிச் நார்ட்ஜே, லூத்தோ சிபாம்லா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

Story first published: Tuesday, December 9, 2025, 8:01 [IST]
Other articles published on Dec 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+