Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA 2nd ODI - ரிங்கு சிங் இன்று அறிமுகம்.. ஏமாற்றிய ருதுராஜ்! சஞ்சு சாம்சனுக்கு புதிய பொறுப்பு

மும்பை : இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே ஒன்றுக்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

ஐபிஎல் மினி ஏலம் இன்று நடைபெறுவதால் அனைவரின் கவனமும் அங்கு தான் சென்றது. இதனால் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது என்பதையே பல ரசிகர்கள் மறந்து விட்டனர்.

India vs south africa 2nd odi - Rinku singh made debut today as sanju playing at no 5

ஆனால் உங்களுக்கு கிரிக்கெட் தொடர்பான அனைத்து செய்திகளையும் மைக்கில் வழங்குகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்த ரிங்கு சிங் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமாக இருக்கிறார்.

இதன் மூலம் இந்தியாவின் ஃபினிஷர் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது சுரேஷ் ரெய்னா போல் ரிங்கு சிங் இறுதிக்கட்டத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவார் என தெரிகிறது. ரிங்கு சிங் பினிஷராக களம் இறங்குவதால் தற்போது சஞ்சு சாம்சனுக்கு மிடில் ஆர்டரில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி இன்னிங்சை நிலை நிறுத்தி ஆட சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் தொடக்க வீரராக களம் இறங்க ருதுராஜ்க்கு இன்றைய ஆட்டத்தில் வெறும் நான்கு ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். கில் இல்லாத நிலையில் ருதுராஜ் அந்த இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார். இந்த ஆடுகளத்தில் இந்தியா 250-280 ரன்களுக்கு மேல் எடுத்தாலே வெற்றி வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, December 19, 2023, 17:23 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+