Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எல்லாமே பொய்யா..!!” 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றது இந்திய அணி.. ப்ளேயிங் 11ல் திருப்பம்!

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத ப்ளேயிங் 11 உடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று போலாண்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

2வது ஒருநாள் போட்டி

2வது ஒருநாள் போட்டி

முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது மிடில் ஆர்டர் சொதப்பியது தான். எனவே இன்றைய போட்டியில் வெங்கடேஷ் ஐயர் நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் பெரும் ட்விஸ்ட் கொடுத்துள்ளார் கேப்டன் கே.எல்.ராகுல்.

 வீரர்கள் மாற்றம்

வீரர்கள் மாற்றம்

இந்திய அணியில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் மீண்டும் அதே அணியுடன் களமிறங்கப்போவதாக கே.எல்.ராகுல் பேசியுள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், கடந்த போட்டியில் இருந்து பிட்ச் எப்படி செயல்படுகிறது, என்ன தவறு செய்தோம் என கற்றுக்கொண்டுள்ளோம். எனவே மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் எங்கள் அணியின் பேட்டிங் சிறப்பாக இருக்கும் என நினைப்பதாக கூறியுள்ளார். வாய்ப்புக்காக காத்திருந்த ருதுராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், பிரஷித் கிருஷ்ணா ஆகிய வீரர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

காரணம் என்ன

காரணம் என்ன

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இன்று வாழ்வா சாவா போட்டியில் இந்தியா விளையாடுகிறது. எனவே களத்தை பற்றி தெரியாத புது வீரர்களை களமிறக்கினால் சொதப்புவதற்கு வாய்ப்பாக மாறாலாம். எனவே மீண்டும் பழைய வீரர்களையே விளையாட வைத்தால் கம்பேக் கொடுக்க சுலபமாக இருக்கும். இதன் காரணமாக ப்ளேயிங் 11ல் மாற்றம் ஏற்படாமல் இருந்திருக்கலாம்.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், அஸ்வின், ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், பும்ரா, யுவேந்திர சஹால்

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்த களத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி நிதானமாக ரன்களை சேர்த்தால் சராசரியாக 300+ ரன்களை இலக்காக நிர்ணயிக்கலாம். 2வதாக பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும். இங்கு இதுவரை 250 ரன்களுக்கு மேல் ஒரு அணி கூட் விரட்டியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 21, 2022, 14:05 [IST]
Other articles published on Jan 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+