Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அப்படி போடு” இந்திய கிரிக்கெட் வீரர்களின் உணவு மெனுவை கழக்கும் செட்டி நாடு வகைகள் - முழு லிஸ்ட்

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்க டெஸ்டின் போது இந்திய அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மெனு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் , 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி நேற்று முதல் செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 272 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. கே.எல்.ராகுல் சதமும், அஜிங்கியா ரகானே 40 ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்களின் ஃபார்ம் இன்றும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்த சூழலில் மழைக்குறுக்கிட்டது. இதனால் 2ம் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

வீரர்களின் ஓய்வறை

வீரர்களின் ஓய்வறை

ஆட்டம் நடைபெறாததால் வீரர்கள் தங்களது ஓய்வறையில் ஜாலியாக பேசிக்கொண்டும், ஓய்வெடுத்துக்கொண்டும் இருந்தனர். அப்போது திடீரென அவர்களின் ஓய்வு அறையின் பக்கம் வைக்கப்பட்டிருந்த பலகை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதற்கு காரணம் வீரர்களின் உணவு மெனு அதில் எழுதப்பட்டிருந்தது தான்.

 வீரர்களின் உணவு மெனு

வீரர்களின் உணவு மெனு

இந்திய வீரர்களின் உணவு முறையில் டயட் மேற்கொள்ளும் வகையில் ரொட்டி, சப்பாத்தி, வடநாட்டு உணவுகள் இருக்கும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் அவர்களுக்கு செட்டிநாடு உணவு வழங்கப்பட்டுள்ளது.

Recommended Video

What India Ate | இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு இது தான் | Oneindia Tamil
வீரர்களுக்கான விருப்பம்

வீரர்களுக்கான விருப்பம்

சிக்கன் டிக்கா, கடைந்த பருப்பு குழம்பு வகைகளுடன் சேர்த்து செட்டிநாடு சிக்கன் வகையும் உணவில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்திய வீரர்கள் செட்டிநாடு வகை உணவை விரும்பி உண்பதாக தெரிகிறது. இதனால் இந்திய அணியின் உணவு மெனுவில் பெரும்பாலும் செட்டிநாடு வகை இருக்கும் எனக்கூறப்படுகிறது.

Story first published: Monday, December 27, 2021, 21:17 [IST]
Other articles published on Dec 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+