Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் சிறந்த அணி இந்தியா தான்.. இனி பும்ராவை எதிர்கொள்ள தேவையில்லை.. ஓய்வுக்கு பிறகு எல்கார் பேச்சு

கேப் டவுன் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்டு போட்டியை இரண்டே நாட்களுக்குள் முடித்து அபார வெற்றியை ரோகித் படை பதிவு செய்திருக்கிறது.

இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய டீன் எல்கார் தோல்விக்கு பிறகு இந்திய அணியை வெகுவாக பாராட்டினார். முதல் டெஸ்டில் 185 ரன்கள் அடித்ததற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

India vs south africa- Dean Elgar praises team india and jasprit bumrah as world class

அப்போது பேசிய அவர் இன்றைய ஆட்டத்தில் நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் நிச்சயம் எங்களால் கூடுதல் ரன்கள் சேர்த்து இருக்க முடியும். அதை வைத்து நாங்கள் இந்த போட்டியில் தற்காத்துக் கொண்டிருக்கலாம். இருப்பினும் என்னுடைய செயல்பாடு குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். முதல் டெஸ்டில் அணி வெற்றி பெற்றதற்கு என்னுடைய பங்களிப்பு இருந்தது நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன்.

இந்த டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகளாக இருந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மூன்றாவது டெஸ்ட் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா இருக்கிறார். அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்திருக்க வேண்டும். பும்ரா போன்ற வீரரை எதிர்கொள்ளும் போது நாம் நம்மையே சோதித்து கொண்டு, நமது திறனின் எல்லையை கடக்க வேண்டும்.

இனி என் வாழ்க்கையில் பும்ராவை எதிர்கொள்ள தேவையில்லை என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். பும்ராவை எதிர்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பும்ரா அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது நான் இடம்பெற்று இருந்தேன் என நினைக்கிறேன். நாங்கள் இருவரும் ஒரு வீரராக பல தூரத்தை அடைந்து விட்டோம்.

இந்தியா போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடுவது நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். நான் 2012 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்றேன். காயம் காரணமாக இந்த 11 ஆண்டுகளில் ஒரே ஒரு தொடரை தான் நான் தவற விட்டேன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு தொடரின் போது கேப்டனாகவும் செயல்பட்டேன் என்று டீல் கார் கூறினார்.

Story first published: Thursday, January 4, 2024, 20:21 [IST]
Other articles published on Jan 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+