For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியின் பேட்டிங்கை பார்த்தீங்களே.. நிச்சயமாக அந்த 2 வீரரும் தேவை.. ஹர்பஜன் கருத்து

மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் யார் யார் இடம் பெறப் போகிறார்கள் என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

இதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு எந்த ஒரு டி20 தொடரிலும் பங்கிற்காமல் இருந்து வருகின்றனர்.

India vs south africa - Harbahajan singh asks team india to play rohit and virat in t20 WC

இதனால் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் தற்போது கேப்டனாக வலம் வருகிறார்கள். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர் என்றும் இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன்சிங், விராட் கோலியும் ரோகித் சர்மாவும் கண்டிப்பாக டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு அணி நல்ல அணியாக விளங்க வேண்டும் என்றால் சரிசமமான அளவில் இளம் வீர்களும் அனுபவம் வாய்ந்த வீரர்களும் இருக்க வேண்டும்.

விராட் கோலியின் ரோகித் சர்மாவும் டி20 கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்த வீரராக விளங்குகிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் இருவரும் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையில் முற்றிலும் இளைஞர்கள் கொண்ட அணியாக விளங்குகிறார்கள். அவர்களுக்கு நாம் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் நாம் எப்போதுமே வெற்றி மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் வெற்றி பெற்றால் மட்டுமே நமது அணியை நல்ல அணி என்று சொல்கிறோம்.

நாம் இளம் வீரர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்தால் அவர்கள் நிச்சயமாக கற்றுக் கொள்வார்கள். முதலில் நம்மை நாம் மாற்றிக் கொண்டு வெற்றி தோல்வி குறித்து யோசிக்காமல் இருக்க வேண்டும். இந்த இளம் வீரர்கள் கொண்ட அணி தற்போது ஒரு மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தென்னாபிரிக்கா என்பது கிரிக்கெட் விளையாட எளிதான இடம் கிடையாது. கண்டிப்பாக பவுலர்கள் அங்கு சிரமப்படுவார்கள் என்று ஹரபஜன் சிங் கூறியுள்ளார்.

Story first published: Friday, December 15, 2023, 16:49 [IST]
Other articles published on Dec 15, 2023
English summary
India vs south africa - Harbahajan singh asks team india to play rohit and virat in t20 WC இந்திய அணியின் பேட்டிங்கை பார்த்தீங்களே.. நிச்சயமாக அந்த 2 வீரரும் தேவை.. ஹர்பஜன் கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+