Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மோதி பார்த்திடலாம் வா” கே.எல்.ராகுல் - டீன் எல்கர் இடையே திடீர் மோதல் போக்கு.. பரபரப்பு காட்சிகள்!

ஜோகஸ்ன்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் - டீன் எல்கர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் தென்னாப்பிரிக்க அணி 27 ரன்கள் முன்னிலை பெற்று 229 ரன்கள் சேர்த்தது..

முக்கிய விக்கெட்

முக்கிய விக்கெட்

இதனால் கடின இலக்கை நிர்ணயித்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரங்களே கைக்கொடுக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்து அசத்திய கேப்டன் கே.எல்.ராகுல் இந்த முறை 8 ரன்களுக்கு வெளியேறினார். ஆனால் இந்த விக்கெட்டில் தான் சர்ச்சை இருந்தது.

சர்ச்சை

சர்ச்சை

மார்கோ ஜேன்சன் வீசிய ஓவரில் கே.எல்.ராகுல் டிஃபன்ஸ் ஆட முயன்றார். ஆனால் பந்து எட்ஜாகி 2வது ஸ்லிப்பாக நின்றிருந்த ஏய்டன் மர்க்ரமிடம் கேட்ச்சாக சென்றது. ஆனால் பந்தை பிடிக்கும் போது மர்க்ரமின் கைகள் பந்திற்கு அடியில் இருந்ததா, அல்லது பந்து தரையில் பட்டதா எனத்தெரியவில்லை. இதனையடுத்து 3வது நடுவருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

வாக்குவாதம்

வாக்குவாதம்

ஆனால் ஜூம் செய்து பார்த்த போது தெளிவான முடிவு எட்டப்பட முடியாததால், கே.எல்.ராகுல் அவுட் எனக் கொடுக்கப்பட்டது. நடுவரின் முடிவால் அதிருப்தியடைந்த கே.எல்.ராகுல் கோபத்துடன் வெளியேறினார். அப்போது அங்கு கூடியிருந்த தென்னாப்பிரிக்க வீரர்கள் கிண்டலடிக்க, கேப்டன் டீன் எல்கர் வேண்டுமென்றே வம்புக்கிழுத்ததாக தெரிகிறது. இதற்கு கே.எல்.ராகுலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Recommended Video

IND vs SA van der Dussen 'bump-ball' dismissal triggers controversy | Oneindia Tamil
 ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இரு அணி கேப்டன்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளதால், இந்த தொடரில் மீதமுள்ள நாட்களிலும் மோதல் போக்குகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பந்துவீச்சில் பதிலடி கொடுப்பவர்கள் என்பதால் இன்றைய ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Story first published: Wednesday, January 5, 2022, 16:42 [IST]
Other articles published on Jan 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+