“ஒருநாள் தொடரில் ரோகித் இல்லை?” பிசிசிஐ அதிகாரி சைலண்டாக விதித்த கெடு.. அடுத்த கேப்டன் இவர் தான்!
மும்பை: இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான உடற்தகுதி தேர்வுகளில் ரோகித் சர்மா திணறி வரும் போதும், பிசிசிஐ - உறுதியான முடிவு ஏதையும் எடுக்கவில்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளது.
இந்த போட்டி தொடர் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் இதற்கான இந்திய அணி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

பிசிசிஐ குழப்பம்
விஜய் ஹசாரே தொடருக்காக காத்திருந்த பிசிசிஐ, தற்போது தொடர்ந்து அணித்தேர்வை தள்ளிப்போட்டுக்கொண்டே உள்ளது. இதற்கு காரணம் கேப்டன் ரோகித் சர்மாவின் உடல்நிலை தான். நியூசிலாந்து தொடரின் போது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட அவர், தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.

திணறும் ரோகித் சர்மா
ரோகித்தின் உடல்நிலையில் சரியான முடிவு தெரியாமல் எப்படி அணியை உருவாக்க முடியும் என்ற குழப்பத்தில் பிசிசிஐ உள்ளது. இந்நிலையில் அது குறித்து முடிவு எட்டப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் உடற்தகுதி தேர்வில் ரோகித் சர்மா தேர்ச்சிப் பெற்றுவிட்டார். எனினும் கடைசிகட்ட தேர்வுக்கு அவர் சரியான தகுதியுடன் இல்லை எனத்தெரிகிறது. இதனால் கடைசி உடற்தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரோகித்திற்கு சிறிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு அதன் பிறகு தேர்வு நடத்தப்படவுள்ளதாக தெரிகிறது.

24 மணி நேர கெடு
இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், ரோகித் சர்மா கிட்டத்தட்ட குணமடைந்துவிட்டர். அவரை நாங்கள் அவசரப்படுத்தவில்லை. அவரிடம் இருந்து 100% உடற்தகுதியைதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் என்ன நிலைமை இருக்கிறதோ, அதனை வைத்து தான் முடிவு எட்டப்படும்.
Recommended Video

பிரச்சினையே கிடையாது
ரோகித் சர்மா இல்லையென்றாலும், அணியை வழிநடத்த கே.எல்.ராகுல் உள்ளார். அவருக்கு பக்கபலமாய் விராட் கோலி உள்ளார். எனவே ரோகித் சர்மா அணியில் இடம்பெறவில்லை என்றாலும் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பாக இருக்காது. எதுவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டுவிடும் எனத்தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications