Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மை பாய் சாய் சுதர்சன்! மொழி படம் பாஸ்கார் மாதிரி சொன்னேன்.. நீ பெரிய ஆளாக வருவாய்.. அஸ்வின் பாராட்டு

ஜோகனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு மாபெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, சமி, கில் ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாமலேயே இந்திய அணி 200 பந்துகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி இருக்கிறது.

இந்த போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த நான்காவது இந்திய தொடக்க வீரர் மற்றும் 17வது இந்தியர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார்.

india vs south africa - R Ashwin lauds sai sudharsan for scoring 50 in debut


இது சாய் சுதர்சன் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாய் சுதர்சன் குறித்து தாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர் மொழி திரைப்படத்தில் எவ்வாறு எம்எஸ் பாஸ்கர் (அசாருதீனை பார்த்து மார்க் மை வேர்ட்ஸ் இந்தப் பையன் பெரிய ஆளாக வருவான்.

இந்திய அணியை கேப்டன் செய்ய கூட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவாரோ) அதேபோல் சாய் சுதர்சனை பார்த்து நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன். என் வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பையன் மிகப்பெரிய உச்சத்தை தொடுவான் என்று பலமுறை பாராட்டிருக்கிறேன். 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான சாய் சுதர்சன் அதன் பிறகு திரும்பிப் பார்க்காமல் முன்னேறிக்கொண்டே இருக்கிறார்.

டி என் பி எல், ரஞ்சி கோப்பை, ஐபிஎல், கவுண்டி கிரிக்கெட், இந்தியா ஏ அணி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் போட்டி என அனைத்துமே சாய் சுதர்சன் பிரமாதமாக விளையாடி அசத்தியிருக்கிறார். தொடர்ந்து இதுபோல் பல புகழைப் பெற வேண்டும் மை பாய் என்று அஸ்வின் கருத்து தெரிவித்திருக்கிறார்.சமீப காலமாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடிகர் இளவரசு லாரன்ஸ் பார்த்து மை பாய் என்று பெருமை பெற்றுக்கொள்வார். அதையும் தனது டிவிட்டில் அஸ்வின் குறிப்பிட்டு இருக்கிறார்.
Story first published: Sunday, December 17, 2023, 19:33 [IST]
Other articles published on Dec 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+