ஜோகனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 பந்துகள் எஞ்சிய நிலையில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 116 ரன்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி அதனை 16.4 ஓவர்களில் எல்லாம் கடந்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய தென்னாபிரிக்க அணி கேப்டன் ஏய்டன் மார்க்கரம், ஆடுகளம் தாங்கள் கணித்தது போல் செயல்படவில்லை என்று கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் இந்த போட்டி நிச்சயம் கடினமாக இருந்தது.

முதலில் டாஸ் வென்று நாங்கள் பேட்டிங் செய்தோம். நிறைய ரன்கள் அடிக்கலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் இந்திய வீரர்களுக்கு தான் பாராட்டுகளை கூற வேண்டும்.ஆடுகளத்தை அவர்கள் சிறப்பாக பயன்படுத்தி கிரிக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். எங்களை ஆடுகளத்தில் நிலைத்து நிற்க அவர்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவும் இந்திய வீரர்கள் எங்களை விடவில்லை.
ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது. சர்வில் இருந்து எங்களால் மீள முடியாத அளவுக்கு பண்ணி விட்டார்கள். ஆடுகளம் இவ்வாறு செயல்படும் என்றும் நான் நினைக்கவில்லை.ஒரு ஆறு ஏழு ஓவர்கள் வரை வந்து ஸ்விங் ஆகும். அதன் பிறகு பேட்டிங்கிற்கு சாதகமாக தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் இன்றைய ஆட்டத்தில் பந்து நீண்ட நேரம் ஸ்விங் ஆனது.
இதனால் எங்களால் பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாட முடியவில்லை. நிச்சயமாக இது வித்தியாசமான அனுபவமாக தான் இருந்தது. விக்கெட்டுகள் வீழத் தொடங்கியவுடன் ஆடுகளம் இவ்வாறு இருந்தும் எங்கள் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள்.பாசிட்டிவாக விளையாடுவது என்பது முக்கியம்தான். ஆனால் அதேசமயம் புத்தியையும் பயன்படுத்தி விளையாட வேண்டும்.
ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்பதை கணித்து அதற்கு ஏற்ப உங்களுடைய சாட்டை தேர்வு செய்ய வேண்டும். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் செய்த தவறு குறித்து ஆராய வேண்டும். இதை அடுத்து மீண்டும் பேட்டிங் செய்வீர்களா என்று கேள்வி ஏற்பட்டதற்கு நிச்சயமாக மாட்டேன் என்று எய்டன் மார்க்கரம் பதில் அளித்தார்.