இந்த வீரர் தான் அடுத்த ரோகித் சர்மா.. டி20 உலககோப்பையில் கண்டிப்பாக வேண்டும் - சஞ்சய் மஞ்சுரேக்கர்
மும்பை : 50 ஒவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை தழுவி வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இந்த நிலையில் அடுத்த டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை கட்டமைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 போட்டியில் விளையாடாத நிலையில் அவர்களுக்கு பதில் யாரை சேர்க்கலாம் என்ற விவாதம் தற்போது எழுந்து வருகிறது.

இந்த நிலையில் டி20 தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மனாக கில் உள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக ருதுராஜ் வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் அந்த இடத்திற்கு ஜெய்ஸ்வாலை தான் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் டி20 உலக கோப்பையில் மிகவும் முக்கியமான வீரராக ஜெய்ஸ்வால் திகழ்வார்.
இந்தியா தங்களுடைய யுத்திகளை மாற்றி அமைப்பதற்கு ஒரு முக்கிய சாவியாக ஜெய்ஸ்வால் இருப்பார். 2023 உலகக்கோப்பை போட்டியில் ரோகித் சர்மா எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதேபோல் ஒரு தாக்கத்தை டி20 கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் ஏற்படுத்துவார். இதற்கு நாம் ஐபிஎல்க்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்திய அணி இன்னொரு ஒரு டி20 அணியை தேர்வு செய்து மற்ற சர்வதேச அணிகளுடன் விளையாட வைக்க முடியும்.
அதை தான் ஐபிஎல் நமக்கு கொடுத்திருக்கிறது. எனவே ஜெய்ஸ்வாலை இந்திய அணியில் வாய்ப்பு கொடுங்கள் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். 21 வயதான ஜெய்ஸ்வால் இதுவரை 13 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், இரண்டு அரை சதம் என சராசரியாக 33 என்ற அளவில் ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 163 ஆகும். கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடாததே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications