Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜித்தேஷ் சர்மா vs இஷான் கிஷான்- இந்திய டி20 அணியில் யார் வேண்டும்? அதிரடி ஆல் ரவுண்டர் கருத்து

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில் இரண்டாவது t20 போட்டி செவ்வாய் கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி டி20 உலக கோப்பை நடைபெறுகிறது. இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணி எஞ்சிய ஐந்து டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் டி20 அணியின் விக்கெட் கீப்பராக யார் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது.

India vs south africa t20 - Jitesh sharma vs Ishan kishan who should be in indian team

இஷான் கிஷன் டி20 கிரிக்கெட்டில் நன்றாக விளையாடினாலும் அவர் தொடக்க வீரராக தான் ஜொலிக்கிறார். இதேபோன்று ஜித்தேஷ் சர்மா திறமை வாய்ந்த வீரராக நடு வரிசையில் கெத்து காட்டுகிறார். இந்த நிலையில் யாரை இரண்டாவது விக்கெட் கீப்பராக அணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் என்னைக் கேட்டால் நான் ஜிதேஷ் சர்மாவை தான் தேர்வு செய்வேன். இதில் மறு பேச்சுக்கே இடமில்லை. இதை நான் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறேன். ஏனென்றால் நீங்கள் இஷான் கிஷனை, ஒரு நாள் அல்லது டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால் அவரை தொடக்க வீரராக தான் பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது பலவீரர்கள் தொடக்க இடத்திற்கு போட்டி போடுகிறார்கள்.

இதில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்காது. இஷான் கிஷனை நீங்கள் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்றால் அவருக்காக ஒரு இடத்தை தயார் செய்ய வேண்டும். அதுதான் என்னுடைய நம்பிக்கை. ஆனால் இந்திய அணி நிர்வாகம் எதைக் குறித்து யோசிக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இஷான் கிஷன் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

அவரை நான் பார்த்த வகையில் புது பந்தில் நன்றாக அதிரடியாக விளையாடுகிறார். ஆனால் சுழற் பந்துவீச்சை அவர் சிறப்பாக விளையாட வேண்டும். ஏனென்றால் நடு வரிசையில் விளையாடும் போது இசான் கிஷன் சுழற் பந்துவீச்சை அதிக அளவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அது அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம் இந்த இடத்தில் தான் ஜிதேஷ் சர்மா நல்ல ஒரு புதுமையான வீரராக திகழ்கிறார்.

ஜிதேஷ் ஷர்மா சூரியகுமார் யாதவ் போன்று விளையாடுகிறார். ஜிதேஷ் ஷர்மாவிடம் பல ஷாட்கள் இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் நன்றாக முதிர்ந்து வருகிறார். பினிஷிங் ரோலுக்கு ஜித்தேஷ் சர்மா ஏற்ற வீரராக திகழ்வார். அவரால் வேகப்பந்துவீச்சு சுழற் பந்துவீச்சு என இரண்டையும் அடிக்க முடியும். இதன் காரணமாக என்னுடைய பதில் ஜித்தேஷ் சர்மா தான் என்று இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

Story first published: Tuesday, December 12, 2023, 16:07 [IST]
Other articles published on Dec 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+