டர்பன் : இந்திய அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சீனியர் வீரர்கள் இல்லாமல் தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாட்டுக்கு சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதில் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் சீனியர் வீரர்கள் இல்லாமல் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை இதே தென்னாபிரிக்கா மன்னன் தான் வென்றது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சீனியர்கள் இல்லாமல் சூரிய குமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று டி20 தொடரில் விளையாடுகிறது.

இது ஒரு புதிய தொடக்கமாக இந்திய கிரிக்கெட்டிற்கு இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக தன்னுடைய முதல் தொடரிலே ஆஸ்திரேலியாவை நான்கிற்கு ஒன்று என்ற கணக்கில் வீழ்த்தினார். மேலும் பேட்டிங்களும் சூரிய குமார் யாதவ், சிறப்பாக செயல்பட்டார்.
இந்த நிலையில் சூரிய குமாரை பாராட்டியுள்ள டி20 பிதாமகன் கிறிஸ் கெயில், சூரியகுமார் யாதவுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருப்பதாக பாராட்டிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், சூரியகுமார் யாதவை எப்படி பாராட்ட வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அவர் மிக சிறந்த ஒரு வீரராக இருக்கிறார். மைதானத்தின் அனைத்து பக்கத்திலும் அடிக்கக்கூடிய வீரராக இருக்கிறார்.
நிச்சயமாக அவருடைய பேட்டிங் பிரமாதமாக இருக்கிறது. நல்ல ஸ்ட்ரைக் ரேட்,நன்றாக ஒரு வீரர். நிச்சயமாக அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை இப்போதுதான் தொடங்கி இருக்கிறார். இன்னும் நிறைய காலம் அவர் கிரிக்கெட்டில் விளையாடுவார். சூரியகுமார் போன்ற வீரர் தொடர்ந்து ஒரே மாதிரி ரன் அடித்து விளையாட வேண்டும்.
அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. சூரியகுமார் யாதவின் திறமை நம்ப முடியாது அளவில் இருக்கிறது. பந்துவீச்சாளர்கள் சூரியகுமார் யாதவுக்கு எப்படி பந்து வீசி அவரை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரியாது. ஏனென்றால் அவர் 360 டிகிரி கோணத்தில் ரன்களை சேர்க்கிறார். இதனால் பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயமாக கடின காலமாக தான் இருக்கும் என்று கிறிஸ் கெயில் பாராட்டி உள்ளார்.